அமெரிக்காவை சேர்ந்த ஆடை வடிவமைப்பு நிறுவனம்
9/4/2025 2:19:02 PM
அமெரிக்காவை சேர்ந்த ஆடை வடிவமைப்பு நிறுவனம், பிங்க் நிற லோ-கட் கவுன் ஒன்றை சமீபத்தில் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது.அந்த லோ-கட் கவுன் அணிந்த மாடல் பெண் பாந்தர்பேனின் மீது விஷமுள்ள பெரிய கருஞ்சிலந்தி ஊர்ந்து வரும் காட்சியை ஆடை நிறுவனம் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.இக்காட்சியைப் பார்த்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இப்படியொரு படத்தை பார்க்கும்போது இந்த ஆடையை வாங்க மனம் வரவில்லை என்றதுடன், அந்நிறுவனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கிராபிக்ஸ் மூலம் வைக்கப்பட்ட சிலந்தியை அந்நிறுவனம் அகற்றியுள்ளது.