இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தண்டி யாத்திரை ஹர்தீக் படேலின் அடுத்த வியூகம்

9/2/2025 3:13:29 PM
மெட்ரோ ரயில் அலுவலகத்தை மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் முற்றுகை வரும் 18ம் தேதி சாலை மறியல் நடத்த முடிவு அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனா நடால் முன்னேற்றம்

அகமதாபாத்: குஜராத்தில் படேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி காந்தி அடிகள் நடந்து சென்ற தண்டியில் இருந்து அகமதாபாத்துக்கு யாத்திரை செலல ஹர்தீக் படேல் முடிவு செய்துள்ளார்.குஜராத்தில் படேல் ஜாதியினர் தங்களுக்கு ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் 22 வயது இளைஞர் ஹர்தீக் படேல்  தலைமையில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.  10 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தின் மூலம் தேசத்தையே தன் பக்கம் கவனத்தை திருப்பினார் ஹர்தீக் படேல். மேலும் இட ஒதுக்கீடு கேட்டு வட மாநிலங்களில் போராட்டம் நடத்தி வரும் ஜாட், குஜ்ஜார் உள்ளிட்டவர்களோடு இணைந்து படேல் இணைத்தவரும் போராட்டம் நடத்துவர் என்று அறிவித்தார்.கடந்த 1930ம் ஆண்டு ஆங்கிலேயரை எதிர்த்து மகாத்மா காந்தி குஜராத்தில் உள்ள அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி நோக்கி யாத்திரை நடத்தினார். இது தண்டி யாத்திரை என்று புகழ் பெற்றது. இந்த போராட்டம் ஆங்கிலேயர்களை உலுக்கியது.

 தற்போது அதே பாதையில் தண்டியில் இருந்து அகமதாபாத் நோக்கி ஹர்தீக் படேல் யாத்திரை நடத்த போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பட்டீதார் அனாமத் அந்தோலன் சமிதி தலைமை குழுவின் உறுப்பினர் தினேஷ் படேல் கூறுகையில், காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட அதே பாதையில் சுமார் 350 கிமீ தூரம் நாங்களும் பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த யாத்திரை தண்டியில் தொடங்கி அகமதாபாத்தில் முடியும். வருகிற 5 அல்லது 6ம் தேதி யாத்திரையை தொடங்க உள்ளோம். அதே போல் இரண்டாவது கட்டமாக ஹர்தீக் படேல் காந்திய வழியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். அதில் படேல் எம்எல்ஏக்களை சந்தித்து அவர்களுக்கு ரோஜாக்களை கொடுத்து அவர்களிடம் நட்பு ரீதியாக எங்களது கோரிக்கைகளை வலியுறுத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்தை மிகவும் அமைதியான வழியில் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார். குஜராத்தில் உள்ள 182 எம்எல்ஏக்களில் 35 பேர் படேல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • விடிய விடிய நடந்த என்கவுன்டர் காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை



  • மகாராஷ்டிராவில் பயங்கரம் : குண்டு வெடிப்பில் சிக்கி ஒருவர் பலி: 3 பேர் படுகாயம்



  • கர்நாடகாவில் 8 மாதங்களில் 400 விவசாயிகள் தற்கொலை : முதல்வர் சித்தராமைய்யா அதிர்ச்சி தகவல்



  • மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு : பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை ஆலோசனை



  • அசாமில் கனமழைக்கு 6 பேர் பலி: 7 லட்சம் பேர் பாதிப்பு



  • மணிப்பூரில் பதற்றம் அமைச்சர், 5 எம்எல்ஏ வீடு எரிப்பு வன்முறையில் 3 பேர் பலி



  • இட ஒதுக்கீடு போராட்டம் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் : ஹர்தீக் படேல் எச்சரிக்கை



  • திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தமிழகம்- 5 இடங்களில் சீனிவாச திருக்கல்யாணம்



  • வேலைக்கார பெண்ணை அடித்து சித்ரவதை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளி மீது வழக்கு



  • ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை



Facebook

Twitter

சிருஷ்டி டாங்கே முத்தம் ஹீரோ நடுக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]