கருணாநிதி நிறுவினார் என்பதற்காக சிவாஜி சிலையை அகற்றக்கூடாது : ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
9/2/2025 3:01:13 PM
மதுரை: கருணாநிதி நிறுவினார் என்பதற்காக மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.பெண்ணை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் பெற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஐகோர்ட் உத்தரவின்படி மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் கடந்த 27ம் தேதி முதல் கையெழுத்து போட்டு வருகிறார். 7ம் நாளான இன்று கையெழுத்திட்ட பின்னர் இளங்கோவன் அளித்த பேட்டி:சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜியின் சிலையை அகற்றப் போவதாக தமிழக அரசு தெரிவித்திருப்பது தவறான முடிவு. அந்த இடத்தில் இருந்து சிவாஜி சிலையை அகற்றக்கூடாது. சிவாஜி ஒரு பெரிய நடிகர் என்பதை ஜெயலலிதாவே சொல்லி இருக்கிறார்.கருணாநிதி எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். அதற்கு ஏட்டிக்கு போட்டியாக ஜெயலலிதா செயல்படுகிறார். கருணாநிதி நிறுவிய வள்ளுவர் கோட்டம் இன்றைக்கு பழுதடைந்து உள்ளது. அவர் உருவாக்கிய அண்ணா நூலகம் சரியாக பராமரிக்கப்படவில்லை. கருணாநிதி நிறுவினார் என்பதற்காக சிவாஜி சிலையை கடற்கரை சாலையில் இருந்து அகற்றக்கூடாது.இவ்வாறு இளங்கோவன் கூறினார்.