இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

32 ஆண்டுகளுக்கு பிறகு தமிழருக்கு வாய்ப்பு இலங்கையின் எதிர்கட்சி தலைவராகிறார் சம்பந்தன் : அதிபர் சிறிசேன ஒப்புதல்

9/2/2025 2:59:28 PM
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 27.5 டிஎம்சி தண்ணீரை தர கர்நாடகாவுக்கு அறிவுறுத்துங்கள் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் மத்திய அரசு இன்று அறிவிப்பு

கொழும்பு: இலங்கையின் எதிர்கட்சி தலைவராக 32 ஆண்டுகளுக்கு பிறகு தமிழர் ஒருவர் எதிர்கட்சி தலைவராக ஆவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சம்பந்தனை எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்வதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கையில் கடந்த 17ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு நேற்று முதன்முறையாக நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டம் கொழும்புவில் நடைபெற்றது. இதில் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். மேலும் ரணில், சிறிசேன கட்சிகளின் கூட்டணியால் அமைய உள்ள தேசிய அரசில் புதிய அமைச்சர்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். இதையொட்டி தேசிய அரசின் சபாநாயகராக சிறி சேன கட்சியைச் சேர்ந்த கரு ஜெய சூர்ய நேற்று ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில்  எதிர்க் கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
 
இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவை  இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. இந்த சூழலில் அரசில் பங்கெடுக்காத  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிகளவான எம்பிக்களை அதாவது 16 எம்பிக்களை கொண்ட கட்சியாக விளங்குகிறது. எனவே அதற்கே எதிர்கட்சி தலைவர் பதவி அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்பியுமான இரா. சம்பந்தனை எதிர்கட்சி தலைவராக நியமிப்பதற்கான அறிவிப்பை நாளை சபாநாயகர் கரு ஜெயசூரியா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்புதலையும் அதிபர் சிறிசேன வழங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 83ம் ஆண்டு ெஜயவர்தனே அதிபராக இருந்த போது இலங்கை தமிழர் விடுதலை கூட்டமைப்பின் தலைவர்  அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அமெரிக்காவின் விலங்கியல் பூங்கா



  • நெதர்லாந்து நாட்டில் தூக்கி எறியப்படும் பழக்கழிவு



  • பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ்



  • 3 விண்வெளி வீரர்களுடன் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம்



  • சீனாவின் புஜியான் மாகாணம்



  • ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரைச் சேர்ந்தவன் சார்லி பார்க்கர்



  • ஏரி, குளங்கள் நிரம்புவது



  • புத்தர் கோயில்



  • அமெரிக்காவை சேர்ந்த ஆடை வடிவமைப்பு நிறுவனம்



  • அமெரிக்காவின் கவர்ச்சி லேடி



Facebook

Twitter

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]