வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
9/2/2025 2:29:31 PM
ஆலந்தூர்: சென்னை மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், பழவந்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி சம்பவம் அதிகரித்தது. இந்த நிலையில், நங்கநல்லூரில் நடந்துசென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து மடிப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்டவர் ஆலந்தூரை சேர்ந்த ரிஸ்வான் (20). பி.காம் பட்டதாரி என்பதும் சென்னை புறநகர் பகுதிகளில் நடந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர் கொடுத்த தகவல்படி கூடுவாஞ்சேரி சதாம் உசேன் (20), ஆலந்தூர் முகமது அலி (20), ஆதம்பாக்கம் மஸ்தான் (20) ஆகியோரை கைது செய்தனர்.