குடிநீர் வாரிய பொறியாளரை தாக்கினார் அதிமுக பிரமுகர்
9/2/2025 2:29:04 PM
பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி கருணாநிதி நகரில் குடிநீர் வாரியம் சார்பில் புதியதாக குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக அங்குள்ள சாலையில் இன்று காலை பள்ளம் தோண்டினர். அப்போது 45வது வட்ட அதிமுக செயலாளர் எம்.கே. மூர்த்தி அங்கு வந்துள்ளார். ‘’ இங்கு பள்ளம் தோண்ட கூடாது’’ என்று குடிநீர் வாரிய பொறியாளர் பாலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.திடீரென அதிமுக பிரமுகர், பொறியாளர் பாலனை சரமாரியாக தாக்கினார். இதனால் பதற்றமும், பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் பாலன் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இரண்டு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினர். இருவரிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து பொறியாளர் தனது புகாரை திரும்ப பெற்றார்.