வாலிபருக்கு அரிவாள் வெட்டு
9/2/2025 2:27:25 PM
தண்டையார்பேட்டை: சென்னை காசிமேடு அமராஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சகாயராஜ் (38). மெக்கானிக். இவரது நண்பர் ராஜா. இவரும் மெக்கானிக். நேற்றிரவு 7 மணியளவில் புதுவண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டத்தில் உள்ள ராஜாவை பார்க்க மெக்கானிக் செட்டுக்கு சென்றார் சகாயராஜ். அங்கு ராஜா இல்லை. அவருக்காக சகாயராஜ் காத்திருந்தார். அந்த நேரத்தில் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 பேர், ‘இங்கு யார் ராஜா’ என கேட்டுள்ளனர். அதற்கு சகாயராஜ், ‘நான்தான் ராஜா’ என கூறியுள்ளார்.இதையடுத்து அவர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சகாயராஜை சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்து, கைகளில் பலத்த வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடித்தார். இதையடுத்து இருவரும் பைக்கில் தப்பினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சகாயராஜை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரித்தனர். இதில், ராஜாவைத்தான் அவர்கள் தீர்த்து கட்ட வந்ததும், ‘நான்தான் ராஜா’ என கூறியதால் சகாயராஜை அரிவாளால் வெட்டியதும் தெரிந்தது. இருவரும் கூலிப்படையை சேர்ந்தவர்களா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.