மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பிளம்பர் பலி
9/2/2025 2:26:41 PM
துரைப்பாக்கம்: விழுப்புரம் ஆடல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (24) சென்னை செம்மஞ்சேரியில் தங்கி பிளம்பராக பணியாற்றினார். இவர் நேற்று மாலை ராஜீவ்காந்தி சாலையில் இருந்து செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு சாலை வழியாக நுக்கம்பாளையத்திற்கு பைக்கில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிரே வந்த மாநகர பேருந்து பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில், நிலை தடுமாறி அவர் கீேழு விழுந்த போது அவரின் தலை மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், அதே இடத்தில் மணிகண்டன் இறந்தார். தகவல் அறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், சடலத்தை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.