தமிழகத்தில் நாளை முதல் பி.எட் விண்ணப்பம் விநியோகம்
9/2/2025 2:13:24 PM
கோவை: தமிழகத்தில் பி.எட் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் நாளை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.தமிழகத்தில் 2015-16ம் கல்வியாண்டுக்கான பி.எட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நாளை முதல் துவங்குகிறது. வருகின்ற 10ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளில் இந்த விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.கோவை மண்டலத்திற்கு உட்பட்டவர்கள், கோவை டவுன்ஹாலில் உள்ள அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் விண்ணப்பம் பெறலாம். எஸ்சி - எஸ்டி மாணவர்கள், சாதி சான்றிதழ் நகல் அளித்து ரூ.175 செலுத்தி விண்ணப்பம் பெறலாம், பிற வகுப்பினர் ரூ.300 செலுத்தி விண்ணப்பம் பெறலாம்.
விண்ணப்ப தொகையை பணமாக அல்லது வரைவோலையாக செலுத்தலாம். வரைவோலை “The secretary, Tamilnadu B.Ed. Admission, chennai 600-005” என்ற பெயரில் (சென்னையில் பணமாக்கும் வகையில்) தேசியமயமாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட வேண்டும். நேரில் வருவோருக்கு மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்.11ம் தேதி மாலை 5 மணிக்குள் “செயலர், தமிழ்நாடு பி.எட் மாணவர் சேர்க்கை 2015-16, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேனி, சென்னை 600005” என்று முகவரிக்கு அனுப்பவேண்டும். இதற்குபிறகு பெறப்படும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.