இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெடரர், வாவ்ரிங்கா முன்னேற்றம்

9/2/2025 2:12:12 PM
மெட்ரோ ரயில் அலுவலகத்தை மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் முற்றுகை வரும் 18ம் தேதி சாலை மறியல் நடத்த முடிவு அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனா நடால் முன்னேற்றம்

நியூயார்க்:  அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரண்டாம் சுற்றுக்கு உலகின் 2ம் நிலை வீரர் பெடரர், வாவ்ரிங்கா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆடவர், மகளிர் பிரிவுகளில் முதல் சுற்றுப்போட்டிகள் நேற்றிரவு நடந்தது. உலக தர வரிசையில் 2ம் இடத்தில் உள்ளவரான சுவிட்ஜர்லாந்தின் ரோஜர் பெடரர், முதல் சுற்றில் அர்ஜென்டினாவின் லியனார்டோ மேயரை எதிர்த்து ஆடினார். ஆட்டம் முழுவதும் பெடரரின் கையே ஓங்கியிருந்தது. 11 ஏஸ் சர்வீஸ்களை விளாசினார் பெடரர். சிறப்பான முதல் சர்வீஸ்கள் மூலம் 84 சதவீத புள்ளிகளை பெடரர் அள்ளினார். 6 முறை மேயரின் சர்வீஸ் கேம்களை முறியடித்த பெடரர், 6-1, 6-2, 6-2 என நேர் செட்களில் எளிதாக வென்று 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.

5ம் நிலை வீரரான சுவிட்ஜர்லாந்தின் வாவ்ரிங்கா முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் அலெக்சிஸ் ராமோசுடன் மோதினார். முதல் 2 செட்களில் ராமோசின் சர்வீஸ் கேம்களை முறியடித்து செட்களை கைப்பற்றினார் வாவ்ரிங்கா. மூன்றாவது செட்டில் ராமோஸ் சிறப்பாக விளையாடி நெருக்கடி கொடுக்கவே, டை பிரேக்கர் முறையில் அந்த செட்டில் முடிவு காணப்பட்டது. இதில் நேர்த்தியாக ஆடி செட்டை வாவ்ரிங்கா தனதாக்கிக் கொண்டார். வாவ்ரிங்கா 7-5, 6-4, 7-6(6) என்ற செட் கணக்கில் ராமோஸை வீழ்த்தினார்.

முதல் சுற்றில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர், டுனிஷிய வீரர் ஜாசிரியுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 24 ஏஸ் சர்வீஸ்களை அதிரடியாக வீசி அசத்தினார் ஜான் இஸ்னர். 4 முறை ஜாசிரியின் சர்வீஸ் கேம்களை முறியடித்த இஸ்னர், 6-2, 6-3, 6-4 என நேர் செட்களில் வென்றார்.ஆடவர் பிரிவில் 6ம் நிலை வீரரான செக். குடியரசின் தாமஸ் பெர்டிச், அமெரிக்க வீரர்கள் ஜாக் சோக், டொனால்ட் யங், கிராய்செக், பிரான்ஸ் வீரர்கள் மாகுட், காஸ்குவெட், ஜப்பான் வீரர் நிஷியோகா, தென் ஆப்பிரிக்காவின் கென்னத் ஆண்டர்சன், ஆஸி. வீரர் லெய்டன் ஹெவிட் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 2ம் நிலை வீராங்கனையான ரொமேனியாவின் சிமோனா ஹாலேப், நியூசிலாந்தின் எராகோவிச்சை எதிர் கொண்டார். எரகோவிச்சின் சர்வீஸ் கேம்களை முறியடித்து ஹாலேப் முதல் செட்டை வென்றார். இரண்டாம் செட்டிலும் ஹாலேப் 3-0 என்ற கேம் கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில், காயம் காரணமாக எரகோவிச் ஆட்டத்திலிருந்து வெளியேறினார். இதனால் ஹாலேப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

6ம் நிலை வீராங்கனையான செக். குடியரசின் லூசி சபரோவா, உக்ரேன் வீராங்கனை லெசியா டுரென்கோவை முதல் சுற்றில் எதிர் கொண்டார். சமீபகாலமாக டென்னிஸ் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டுரென்கோ, இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி சபரோவாவை திணறடித்தார். தனது முதல் சர்வீஸில் 79 சதவீத புள்ளிகளை அள்ளிய டுரென்கோ, 5 முறை சபரோவாவின் சர்வீஸ் கேம்களை முறியடித்தார். இதன் மூலம் டுரென்கோ 6-4, 6-1 என நேர் செட்களில் சபரோவாவை அதிர்ச்சித்தோல்வி அடையச் செய்தார். 4ம் நிலை வீராங்கனை கரோலின் ஓஸ்னியாக்கி, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரெங்கா, ஜெர்மனியின் ஏஞ்சலீக் கெர்பர், பெட்கோவிக், ஆஸி., வீராங்கனை சமந்தா ஸ்டோசர், ஸ்பெயின் வீராங்கனை முகுருசா ஆகியோரும் 2ம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

மேலும் சில
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனா நடால் முன்னேற்றம்



  • இங்கி. - ஆஸி. இடையே இன்று முதல் ஒன் டே



  • ஆசிய குத்துச்சண்டை போட்டி அரையிறுதியில் சதீஷ்குமார்



  • வெற்றிதான் முதல் இலக்கு - விராட் கோஹ்லி



  • உலக கோப்பையை வென்று தந்தால் சல்மான் பட்டை பாக்., மன்னிக்கும் சோயப் அக்தர் பேட்டி



  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், செரீனா முன்னேற்றம் : நிஷிகோரி அதிர்ச்சி தோல்வி



  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டி: 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி



  • ரோகித் சர்மா அரைசதம் இந்தியா முன்னிலை



  • அமெரிக்க ஓபன் இன்று துவக்கம் ஒரே ஆண்டில் 3-வது கிராண்ட் ஸ்லாமுக்கு குறி வைக்கிறார் ‘உலக நம்பர் 1’ ஜோகோவிச்



  • ஆஸி.- இங்கிலாந்து இன்று டி20 போட்டியில் மோதல்



Facebook

Twitter

சிருஷ்டி டாங்கே முத்தம் ஹீரோ நடுக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]