தலைப்புக்கு பஞ்சமா? சுசீந்திரன் பதில்
9/2/2025 2:10:24 PM
‘வெண்ணிலா கபடி குழு’ என யதார்த்தமான டைட்டிலுடன் படத்தை இயக்கிய சுசீந்திரன் தனது அடுத்தடுத்த 3 படங்களுக்கு நான் மகான் அல்ல, ஜீவா, பாயும்புலி என ஏற்கனவே வெளிவந்த படங்களின் டைட்டிலை தேர்வு செய்தார். டைட்டிலுக்கு பஞ்சமா என்றதற்கு பதில் அளித்தார். அவர் கூறியது: டைட்டிலில் என்ன இருக்கிறது என்று சிலர் சொல்வார்கள். ஸ்கிரிப்ட் எவ்வளவு முக்கியமோ அதுபோல் தலைப்பும் முக்கியம். நான் தேர்வு செய்த 3 பழைய டைட்டில்கள் ஸ்கிரிப்ட்டுக்கு பொருத்தமானது. நான் மகான் அல்ல, ஜீவா டைட்டில் வைக்கும்போதும் விமர்சனம் எழுந்தது. படத்தை பார்த்துவிட்டு பொருத்தமாக இருப்பதாக ஒப்புக்கொண்டார்கள். பாயும்புலியில் என்கவுன்ட்டர் போலீஸாக வருகிறார் விஷால். ஒரு கொலைசெய்துவிட்டு யாரும் தப்பிவிட முடியாது. அதேசமயம் நேர்மையான ஒரு போலீஸை கொன்றவன் எந்தவிதத்திலும் தப்பிக்க முடியாது என்பதுதான் ஸ்கிரிப்ட். இதற்கு இந்த தலைப்பு எவ்வளவு பொருத்தமானது என்பது படம் பார்க்கும்போது தெரியும். ஆக்ஷனுடன் காமெடிக்கு சூரி, ரொமான்ஸுக்கு காஜல் அகர்வால் என்று கமர்ஷியலுக்கு பஞ்சமில்லாத படமாக இது இருக்கும்.