தேவலோக காமெடியில் புதுமுகங்கள்
9/2/2025 2:10:04 PM
புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘அந்த 60 நாட்கள்’. இதுபற்றி இயக்குனர் எஸ்.ராஜசேகர் கூறியது:ஒரு மனிதன் தவறு செய்தால் தண்டனை நிச்சயம். சிலர் தண்டனையை உடனே அனுபவிப்பார்கள். சிலர் இறந்து தேவலோகம் சென்றாலும் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்று கற்பனை கலந்து முழுநீள நகைச்சுவை படமாக உருவாகிறது. தவறு செய்த வாலிபன் 60 நாளில் பிராயசித்தம் தேட வேண்டி உள்ளது. அது நடந்ததா என்பது கதை. ஹீரோ அன்பு. காமெடி நடிகர் மயில்சாமியின் மகன். ஹீரோயின் சந்திரிகா. அர்ஜூனன், பவர்ஸ்டார், சங்கிலி முருகன், டி.பி.கஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், பாண்டு, சார்லி, மதன்பாப், அனுமோகன், வையாபுரி, நளினி, என பெரிய நகைச்சுவை பட்டாளமே நடிக்கின்றனர். வி.சுப்பையன் தயாரிப்பு. கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு. என்.எஸ்.கே. இசை.இவ்வாறு இயக்குனர் கூறினார்.