ஆபாச படம் எடுத்து சிறுமி பலாத்காரம் கொடூர வாலிபர் கைது
9/2/2025 2:07:55 PM
கொள்ளிடம்: நாகை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த புளியந்துறையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் சிலம்பரசன்(19). இவர் சீர்காழியில் உள்ள சமையல் எரிவாயு நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 28ம் தேதி வீடு அருகே உள்ள வாய்க்கால் பகுதிக்கு அழைத்து சென்று மிரட்டி உடைகளை அகற்றி உள்ளார். பின்னர் அந்த சிறுமியை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.நேற்று முன்தினம் மாலை அந்த படத்தை சிறுமியிடம் காட்டி மிரட்டி, ஊராட்சிக்கு சொந்தமான பழைய தொலைக்காட்சி கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதன்பிறகு சிறுமி அழுதபடி வீட்டுக்கு வந்துள்ளார். பெற்றோர் ே கேட்டபோது நடந்தவற்றை சொல்லியுள்ளாள்.இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்படி புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து சிலம்பரசனை கைது செய்தனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.