பிளாக்கில் மது விற்பனை செய்ய உடந்தை எஸ்எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்
9/2/2025 2:07:36 PM
தர்மபுரி: பிளாக்கில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய உடந்தையாக இருந்த சிறப்பு எஸ்ஐ, ஏட்டு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் சிற்றரசு (53). ஏட்டாக பணியாற்றுபவர் சின்னசாமி (45). இருவரும் டாஸ்மாக் மதுவை பதுக்கி வைத்து, கூடுதல் விலையில் விற்பனை செய்யும் நபர்களிடம் இருந்து மாமூல் வசூல் செய்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.இதுபற்றி மாவட்ட எஸ்பி லோகநாதனுக்கு தெரிவந்தது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.விசாரணையில், இருவரும் லஞ்சம் வாங்கிக் கொண்டு மது விற்பனை செய்ய உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, எஸ்எஸ்ஐ சிற்றரசு, ஏட்டு சின்னசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி லோகநாதன் உத்தரவிட்டார்.