நிலத்தடிநீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்க தடை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
9/2/2025 2:00:11 PM
திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில், ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்க தடை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமழிசை பேரூராட்சியின் கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் அமுதா முனுசாமி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ஜெ.மகாதேவன், செயல் அலுவலர் எஸ்.குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ‘ பேரூராட்சிக்கு உட்பட்ட தனியாருக்கு சொந்தமான இடங்களில், ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்க தடை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வார்டு எண் 4, 6, 8 மற்றும் 9ல் ரேஷன் கடை கட்டுவது, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் தினக்கூலி அடிப்படையில் துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில், கவுன்சிலர்கள் கே.பாஸ்கரன், எல்.சங்கர், கே.மாலதி, வி.சங்கர், தி.வே.முனுசாமி, கே.முருகன், ஆர்.கருணாநிதி, வி.வேணுகோபால், டி.செண்பகவல்லி, மு.திருநாவுக்கரசு, கே.சுபாஷினி, சி.விஜயலட்சுமி, பி.சந்திரன், ஆர்.ராசாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.