காஞ்சிபுரத்தில் ராஜஸ்தான் அசோசியேஷன் ஆலோசனை கூட்டம்
9/2/2025 1:56:21 PM
காஞ்சிபுரம்: ராஜஸ்தான் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு, ராஜஸ்தான் அசோசியேசன் ஆப் காஞ்சிபுரம் சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் கிளை தலைவர் ரிஷபகுமார் சுரானா தலைமை வகித்தார். செயலாளர் அசோக்குமார் சவுதர் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர்கள் கெயின் சந்த் பரோனா, மோகன்லால் பஜாஜ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் சுபாஷ் சந்த் ரங்கா, பொதுச்செயலாளர் பிரவீன்குமார் செல்டா, எஸ்டேட் கவுன்சில் நிர்வாகிகள் சாந்திலால் ஜெயின், புளோர், காஞ்சிபுரம் எம்எல்ஏ சோமசுந்தரம், அரிமா சங்க மாவட்ட ஆளுநர் அரவிந்த்குமார் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், மாதந்தோறும் இலவச கண் சிகிச்சை, ரத்ததான முகாம் நடத்துவது, ஏழை மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம், கல்வி உதவித்தொகை வழங்குவது, காஞ்சிபுரத்தில் குளிர்ந்த குடிநீர் தொட்டி அமைத்து தருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.