நாட்டுப்புற கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை
9/2/2025 1:56:03 PM
செங்கல்பட்டு: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தமிழ்நாடு அரசு நிறுவனம் இணைந்து தமிழகத்தில் 10 நாட்டுப்புற கல்லூரிகளை தேர்ந்தெடுத்து அங்கு பயிலும் மாணவ, மாணவிகள், விவசாயிகள், தன்னார்வ தொண்டு நிறுவன அங்கத்தினர் பயன்பெறும் வகையில் 5 நாட்கள் கருத்தரங்கம் மற்றும் பயிற்சி பட்டறை நடத்தியது. விலங்கியல் துறை சார்பில் நடந்த இந்த பயிற்சி பட்டறை, கடந்த மாதம் 8ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதன் நிறைவு விழா செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் நடராஜன் தலைமை வகித்து, பயிற்சியில் பங்கேற்ற 85 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார். விலங்கியல் துறை பேராசிரியர் ரமேஷ் பாபு வரவேற்றார். டாக்டர் குப்புசாமி நன்றி கூறினார்.