ஒகேனக்கல்லில் 4வது நாள் தேடும் பணி குழந்தை உடலை மீட்பதில் சிக்கல் பரிசல் ஓட்ட தடை நீட்டிப்பு
9/2/2025 1:52:31 PM
பென்னாகரம்: சென்னை தி.நகர் சவுத் உஸ்மான் ரோட்டை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி கோமதி. இவர்கள் தங்களது திருமண நாளை கொண்டாடுவதற்காக மகன்கள் சச்சின் (6), தர்ஷன் (2) மற்றும் உறவினர்கள் 5 பேருடன் ஒகேனக்கல் வந்தனர். கஜா முருகேசன் என்பவரது பரிசலில் செல்லும்போது பரிசல் ஆற்றில் கவிழ்ந்தது. இதில், ராஜேஷ், கோமதி, சச்சின் உயிர் தப்பினர். மற்ற 6 பேரும் உயிரிழந்தனர். 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. 10 மாத குழந்தை சுபிக்ஷாவின் உடலை தேடும் பணி 4வது நாளாக இன்றும் நடந்து வருகிறது. பரிசல் ஓட்டிகள், தீயணைப்பு துறையினர், போலீசார் என 100க்கும் மேற்பட்டோர் குழந்தையின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நவீன கேமரா போன்ற ஆற்றில் மூழ்கியவர்களை மீட்பதற்கான கருவிகள், ஒகேனக்கல் தீயணைப்பு நிலையத்தில் இல்லாததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 4 நாட்களை கடந்து விட்டதால், குழந்தையின் உடலை மீன்கள் தின்று விடும் அபாயமும் உள்ளதால், உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிலைமை சீராகும் வரை பரிசல் இயக்குவதற்கான தடை தேதி குறிப்பிடப்படாமல் நீட்டிக்கப்பட்டுள்ளது.