இலவச பப்ளிசிட்டி மோகம்
9/2/2025 1:48:46 PM
சமூக வலைதளங்கள் வந்த பிறகு சில ஹீரோ, ஹீரோயின்களுக்கு இலவச பப்ளிசிட்டி மோகம் அதிகரித்துவிட்டது. எதற்கெடுத்தாலும் டுவிட்டர், பேஸ்புக் பக்கத்தை திறந்து ஏதாவது எழுதுவது, போட்டோக்களை அப்லோட் செய்வது என எந்நேரமும் பிசியாக இருக்கிறார்கள். லட்சுமி ராயும் அதில் ஒருவர். சமீபத்தில் ஷூட்டிங்கில் லேசான காயம் அடைந்தார். உடனே அந்த போட்டோக்களை சமூக வலைதளத்தில் போட்டுவிட்டார். சண்டை காட்சியில் நடித்தால் அடிபடாமல் இருக்காது போலிருக்கு என தனது கருத்தை பதிவு செய்து, கையில் காயம் பட்டிருப்பதை காட்டும் விதமாக ‘போஸ்’ கொடுத்திருக்கிறார்.