இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

குறை தீர்வு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த வாலிபருக்கு பெண் இன்ஸ்பெக்டர் ‘பளார்’

9/1/2025 3:02:00 PM
தொழில் கல்விக்கு பொது நுழைவு தேர்வு கூடாது : கருணாநிதி அறிக்கை அக்டோபர் 10க்குள் விவசாய கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை : தெலங்கானாவில் எதிர்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு: விவசாயிகள் பிரச்னை வலுக்கிறது

வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் நந்தகோபால் தலைமையில் நேற்று நடந்தது. நாட்றம்பள்ளியை சேர்ந்த  சேகர்(36) கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார். இவர் கடந்த 2001ம் ஆண்டு திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து கலப்பு திருமணம்  செய்துள்ளார். குடும்ப தகராறில் மாடியில் இருந்து தள்ளிவிட்டதில், சேகரின் ஒரு கை முறி்ந்து விட்டதால் பிச்சை எடுத்து வருகிறாராம். இதனால் மனைவி,  கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டாராம்.தனக்கு தொல்லை கொடுத்து வரும் தனது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கலெக்டர்  அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்வு கூட்டத்தில் பலமுறை சேகர் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். நேற்று காலை நடந்த குறைதீர்வு  கூட்டத்திற்கு மனு கொடுக்க சேகர் வந்தார்.

அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த வேலூர் அனைத்து மகளிர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சேகரை மடக்கி, எத்தனை முறைதான் மனுகொடுக்க  இங்கு வருவாய் என்று கேட்டபடி, அவரை வெளியே தள்ளினார். ஆத்திரமடைந்த சேகர், ‘நான் கொடுத்த 6 மனுக்களில் ஒரு மனுவுக்காவது தீர்வு கண்டால் நான்  ஏன் இங்கு வரபோகிறேன். எனக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். நான் கலெக்டரை சந்தித்து மனுகொடுக்கவேண்டும்’ என்றார். இதனால் ஆத்திரமடைந்த  இன்ஸ்பெக்டர் செல்வி, வெளியே போகும்படி தள்ளியவாறு திடீரென சேகரின் கன்னத்தில், ‘பளார், பளார்’ என்று அறைந்துவிட்டார். இது பரபரப்பை  ஏற்படுத்தியது.

மேலும் சில
  • டிசம்பர் மாதத்தில் இருந்து ஜெ.க்கு எதிரான அலை வீசும்: ராமதாஸ் பேட்டி



  • கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்



  • லாரி ஸ்டிரைக் வாபஸ் எதிரொலி : தமிழகம் முழுவதும் வர்த்தகம் சீரானது பொருட்கள் விலை குறைகிறது



  • வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • தாம்பரத்தில் மமக மாநில பொதுக்குழு கூட்டம் : கட்சி கோஷ்டி பூசல் முடிவுக்கு வந்தது



  • தேங்கியிருந்த மழைநீரில் நடந்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலி



  • பல்லவன் இல்லம் அருகே மக்கள் மறியல் செய்ய முயற்சி 254 வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் வந்ததால் பரபரப்பு



  • 3 ஆண்டுகள் சட்ட படிப்புக்கு தடை விதிக்க கமிட்டி குற்ற வழக்கில் தொடர்புடையவர் வக்கீலாக பதிவு செய்ய தடை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு



  • தொழில் கல்விக்கு பொது நுழைவு தேர்வு கூடாது : கருணாநிதி அறிக்கை



  • காசியில் போலீசாரை கண்டித்து சாதுக்கள் பேரணியில் வன்முறை வாகனங்களை கொளுத்தி அட்டகாசம்



Facebook

Twitter

Kannada actor Shivraj Kumar sudden heart attack
கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு திடீர் மாரடைப்பு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]