இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பஸ், ஆட்டோ நாளை ஓடாது

9/1/2025 3:01:32 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

சென்னை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய மின்சார சட்டம், சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றை திரும்ப பெற  வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, தற்போது உள்ள பணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டத்தை அனைத்து  தொழிலகங்களிலும் அமல்படுத்த வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (2ம் தேதி) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்  மேற்கொள்வது என்று கடந்த மே மாதம் 26ம் தேதி டெல்லியில் நடந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில்  தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, உள்பட 11 தொழிற்சங்கங்க நிர்வாகிகள் இணைந்து ஏகமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றினர். இது தொடர்பாக  மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தில் நடந்த பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

நாளை நடபெற இருக்கிற பொது வேலை நிறுத்த போராட்டத்தில், மத்தி, மாநில அரசு ஊழியர்கள், அரசு மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள், தனியார் பஸ்  உரிமையாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் சங்கம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் பழுது பார்ப்போர் சங்கம், வங்கி,  இன்சூரன்ஸ், லாரி உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ, கார் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கம், உள்பட 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து  கொள்கின்றன. தமிழகத்திலிருந்து சுமார் 30 லட்சத்துக்கு மேற்பட்டோரும், நாடு முழுவதிலிருந்து 20 கோடிக்கு மேற்பட்டோரும் போராட்டத்தில் கலந்து  கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்களிலும் ஒரு லட்சத்து 40  ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். இதில் ஆளும்கட்சி சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தை தவிர மற்ற தொழிலாளர்கள் அனைவரும் பங்கு கொள்ள  இருப்பதாலும், தனியார் பேருந்து ஊழியர்களும் கலந்து கொள்வதாலும், பெரும்பாலான பகுதிகளில் பயணிகள் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. அதே போன்று ஆட்டோ, டிராவல்ஸ் கார் உள்ளிட்ட வாகனங்களும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • மக்கள் நலனில் ஜெ.வுக்கு அக்கறை இல்லை மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி தாக்கு



  • வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய ரூ. 1 லட்சம் லஞ்சம் தாம்பரம் நகராட்சி ஊழியர் பேச்சு வாட்ஸ் அப்பில் உலா



  • விலைவாசி உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரஸ் நூதன போராட்டம்



  • தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் மறியல் : செய்ய பெண்கள் திரண்டதால் பரபரப்பு



  • பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்



  • ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரியை முதல்வர் திறந்து வைத்தார்



  • அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்



  • ஈரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் கதவை லாக் செய்து ரூமில் தவித்த சிறுவன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்



  • விபத்தில் தாய், மகள் பலி



  • திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா: தங்க மயில் வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]