ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டி: 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
9/1/2025 2:19:31 PM
கார்டிப்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரை 3-2 என்ற கணக்கில் இழந்தது. இரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டி20 போட்டி கார்டிப் சோபியா கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. கேப்டன் மோர்கன் 74, மொயின் அலி 72 ரன்கள் குவித்தனர். கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்து, 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிகபட்சமாக ஸ்மித் 90 ரன்கள் விளாசினார். மொயின் அலி ஆட்ட நாயகன் விருது வென்றார். இது குறித்து மோர்கன் கூறுகையில், ‘‘இது மிகச்சிறப்பான வெற்றி. இது போன்ற பரபரப்பான ஆட்டங்களில், வலுவான அணிகளுக்கு எதிராக விளையாடும் போது, நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். பென் ஸ்டோக்ஸ் கடைசி ஓவரை மிகச்சிறப்பாக வீசினார். இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி’’ என்றார்.