இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மணிப்பூரில் பதற்றம் அமைச்சர், 5 எம்எல்ஏ வீடு எரிப்பு வன்முறையில் 3 பேர் பலி

9/1/2025 2:01:28 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

சுராசந்த்பூர்: மணிப்பூரில் சட்ட பேரவையில் இயற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஏராளமானோர் வன்முறை சம்பவங்களில்  ஈடுபட்டனர். இதில் 3 பொதுமக்கள் பலியாயினர். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர், 5 எம்எல்ஏக்களின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதையடுத்து  ஊரடங்கு உத்தரவு அமல்படுத் தப்பட்டுள்ளது.மணிப்பூரில் முதல்வர் ஒக்ராம் சிங் இபோபி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மணிப்பூர்  சட்டபேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவி–்த்து ஏராளமானோர் போராட்டத்தில் குதித்தனர். இதில்  சுராசந்த்பூர் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் காலவரையற்ற 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த வன்முறை சம்பவங்களில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் போராட்டக்காரர்கள் மணிப்பூர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் புங் சா தங் டோன்சிங் வீடு மற்றும் 5 எம்எல்ஏக்களின் வீடுகளையும் அடித்து உடைத்து  சூறையாடி தீ வைத்து கொளுத்தினர். மேலும் போலீசாரின் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் எம்எல்ஏ ஒருவரின்  ஆதரவாளரை போராட்டக்காரர்கள் உயிருடன் கொளுத்தினர்.மணிப்பூர் மாநிலத்தில் நில சீர்திருத்தம், வெளியாட்கள் மணிப்பூரில் நுழைவதற்கு கட்டுப்பாடு  உள்ளிட்ட 3 மாசோதாக்களை மாநில அரசு நேற்று சட்டபேரவையில் நிறைவேற்றியதுதான் வன்முறை சம்பவங்களுக்கு வித்திட்டுள்ளது. மேலும் இந்த  மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களையும் குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.  இதன் காரணமாக மணிப்பூரில் பதற்றம் நிலவி வருகிறது. சட்டபேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட தகவல் பரவியதுமே நேற்று மாலை 6 மணிக்கே  வன்முறை சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கிவிட்டன.

ஆனால் இந்த சம்பவங்களில் அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் பாதுகாப்பாக இருப்பதாக மாநில போலீசார் உறுதிப்படுத்தினர். அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு  அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வன்முறை சம்பவங்கள் காரணமாக சுராசந்த்பூரில் போலீசாரின் வாகனத்தையும் கலவரக்காரர்கள் தீ வைத்து  எரித்தனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், மாநில  அரசு தற்போது கொண்டு வந்துள்ள இந்த சட்டம் காரணமாக பழங்குடியினராகிய  நாகாக்கள்,குக்கீக்கள் ஆகியோர் தங்களது நிலத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் காரணமாக  அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சில
  • எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் : ராக்கெட் குண்டு வீசியதில் ஒருவர் பலி



  • சுப்பிரமணிய சாமி மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்கு தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு



  • ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி



  • காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களையே மோடி அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது: முன்னாள் மத்திய அமைச்சர் தாக்கு



  • கூடுதல் தொகுதி கேட்டு முலாயம் அடம் நிதிஷ் கூட்டணியில் குழப்பம் நீடிப்பு: பீகார் அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்



  • ஆந்திராவில் ஒரேநாளில் மின்னல் தாக்கி 20 பேர் பலி



  • இந்தியா, பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை



  • அரசு நிர்வாகத்தில் விண்வெளி தொழில்நுட்பம் : மத்திய மாநில அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை



  • ஐஎஸ் தீவிரவாதத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கிடையாது



  • தாயை பார்க்க செல்லும் மகன்கள் போல மத்திய அமைச்சர்கள்-ஆர்எஸ்எஸ் சந்திப்பு: வெங்கய்யா நாயுடு பெருமிதம்



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]