இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட கோரி சசிபெருமாள் சமாதி அருகே குடும்பத்தினர் உண்ணாவிரதம்

8/24/2015 3:24:00 PM
சென்னை அரசு பொது மருத்துவமனையில் மலிவு கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை: முதல்வர் ஜெயலலிதா தகவல் மதுவிலக்கு தீர்மானத்துக்கு அனுமதி மறுப்பு திமுக உள்பட எதிர்கட்சிகள் வெளிநடப்பு சட்டசபையில் பரபரப்பு

இளம்பிள்ளை: இன்று துவங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிடக்கோரி, சசிபெருமாளின் சமாதி அருகே மனைவி,  மகன்கள், மகள் உள்பட குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தொடர் போராட்டங்களில்  ஈடுபட்டு வந்த காந்தியவாதி சசிபெருமாள், மதுவிலக்கு போராட்டத்தின் போது உயிரிழந்தார். அவரது கோரிக்கையான பூரண மதுவிலக்கை அமல்படுத்த  வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சசிபெருமாளின் மரணத்திற்கு பின், தமிழகம் முழுவதும்  மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்தன.ஆனால் தமிழக அரசு மதுவிலக்கு குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவரது மரணத்திற்கு  அரசு சார்பில் இரங்கல் கூட தெரிவிக்கப்படவில்லை. இது பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியை  ஏற்படுத்தியது.

இதனிடையே சுதந்திர தின விழாவின் போது, மதுவிலக்கு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தொடர்பான எவ்வித  அறிவிப்பும் முதல்வர் உரையில் இடம் பெறவில்லை.இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. இந்த கூட்டத்தொடரில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை  அரசு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக, சசிபெருமாளின் மூத்த மகன் விவேக்  அறிவித்திருந்தார்.இதன்படி சசிபெருமாளின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இ.மேட்டுக்காட்டில், சசிபெருமாளின் சமாதி அருகே  அவரது குடும்பத்தினர் இன்று காலை 6 மணிக்கு உண்ணாவிரதத்தை துவங்கினர். சசிபெருமாளின் மனைவி மகிழம், மகன்கள் விவேக், நவநீதன், மகள் கவியரசி,  அண்ணன் வெங்கடாச்சலம், தம்பி செல்வம் மற்றும் குடும்பத்தினர் 20க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இது குறித்து விவேக் கூறுகையில், இன்று துவங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.  குறைந்தபட்சம் பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றி கொள்வதாக இன்று மாலைக்குள்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அப்படி இன்று மாலைக்குள் தமிழக அரசிடம் இருந்து உறுதியான அறிவிப்பு வெளியாகாவிட்டால், தேசிய மக்கள்  கூட்டமைப்பின் மூலம், மதுவிலக்கை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும்’’ என்றார்.

மேலும் சில
  • மீனவர்களை நிர்வாணப்படுத்தி நடுக்கடலில் கொடூர தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்



  • சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் அடிப்படை வசதிகளை வலியுறுத்தி திமுக ஆர்ப்பாட்டம் : நாளை நடக்கிறது



  • விஜயகாந்த் பேனர் அகற்றம் மணப்பாக்கத்தில் தேமுதிகவினர் சாலை மறியல்



  • மவுலிவாக்கம் கட்டிடம் விபத்து : நீதிபதி ரகுபதி அறிக்கை சட்டசபையில் தாக்கல்



  • உணவு சாப்பிட்டு சிறுவன் பலி: வடசென்னை கடைகளில் விற்கப்படும் ரச பொடியில் விஷம்?



  • மயிலாப்பூர் துணை கமிஷனர் அலுவலகம் எதிரே நின்ற போலீஸ் வாகனம் மீது தேமுதிக போஸ்டர் ஒட்டிய 2 பேர் மீது வழக்கு கட்சி நிர்வாகியும் கைதாகிறார்



  • அன்னிய பொருட்களுக்கு தடை கோரி வெள்ளையன் தலைமையில் உண்ணாவிரதம்



  • அதிமுக அரசை கண்டித்து எழும்பூர் தெற்கு பகுதி திமுக சார்பில் பொதுக்கூட்டம்



  • சென்னை அரசு பொது மருத்துவமனையில் மலிவு கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை: முதல்வர் ஜெயலலிதா தகவல்



  • இசை பல்கலை சார்பில் 75 படிப்புகள் அறிமுகம்



Facebook

Twitter

போட்டியில் முந்திய காஜல் அகர்வால்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]