இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

‘குறைபாடுகளை நிவர்த்தி செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது : அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

8/24/2015 3:22:29 PM
சென்னை அரசு பொது மருத்துவமனையில் மலிவு கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை: முதல்வர் ஜெயலலிதா தகவல் மதுவிலக்கு தீர்மானத்துக்கு அனுமதி மறுப்பு திமுக உள்பட எதிர்கட்சிகள் வெளிநடப்பு சட்டசபையில் பரபரப்பு

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது. ஆனால், குறைபாடுகளை நிவர்த்தி செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று  ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதுதொடர்பான அறிக்கையை அண்ணாவின் பிறந்த  நாளான  செப்டம்பர் 15-ந் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.  மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நுங்கம்பாக்கத்துக்கு  மாற்றும்  அரசாணையையும் ரத்து செய்து ஐகோர்ட்டு  உத்தரவிட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில், ஓய்வு பெற்ற பேராசிரியை மனோன்மணி  ஒரு பொதுநல மனு தாக்கல்  செய்தார். அதில், ‘அண்ணா நூற்றாண்டு  நூலகம் 2010-ம் ஆண்டு சர்வதேச தரத்துடன் தி.மு.க. ஆட்சியில்  கட்டப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் ஆட்சி  மாற்றம் ஏற்பட்டதும், இந்த அண்ணா நூலகத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வி  இயக்குனரகம் வளாகத்துக்கு மாற்ற தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.  அந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும். அண்ணா  நூலகத்தை இடம் மாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும்’ என்று  கூறியிருந்தார்.


இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2011ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை  இடம் மாற்றம் செய்ய ஐகோர்ட்டுக்கும் இடைக்கால தடை விதித்து,  அந்த தடை நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு  வந்தபோது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘அண்ணா நூற்றாண்டு நூலகம் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது’ என்று கூறினார்.

இதையடுத்து அண்ணா நூலகத்தின் நிலை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல்கள் எம்.சுந்தரம், பி.டி.ஆஷா ஆகியோரை  வக்கீல் கமிஷனர்களாக நியமித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. அவர்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்து, ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.  இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு  தரப்பில் அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த  உத்தரவில், ‘இந்த வழக்கை நாங்கள் முடித்து வைக்கின்றோம்.

மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நுங்கம்பாக்கத்துக்கு மாற்றுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்கிறோம். மேலும், அண்ணா நூற்றாண்டு  நூலகத்தை எக்காரணம் கொண்டு அரசு இடம் மாற்றம் செய்யக்கூடாது.அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள குறைபாடுகளை வக்கீல் கமிஷனர்கள்  சுட்டிக்காட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த குறைபாடுகளை அரசு நிவர்த்தி செய்து, விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அதாவது,  அண்ணாதுரை பிறந்தநாளான  வருகிற செப்டம்பர் 15-ந்  தேதி, அந்த அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்கள். இந்த வழக்கு  விசாரணையின்போது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிலையை நீதிபதிகள் நீங்கள் நேரில் வந்து பார்க்கவேண்டும் என்று மனுதாரர் வக்கீல் வில்சன்  கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதிகள், ‘‘வழக்கு விசாரணை முடிந்த பின்னர், நாங்கள் நூலகத்தை பார்க்க வருவோம்’’ என்று கூறினார்கள்.

மேலும் சில
  • மீனவர்களை நிர்வாணப்படுத்தி நடுக்கடலில் கொடூர தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்



  • சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் அடிப்படை வசதிகளை வலியுறுத்தி திமுக ஆர்ப்பாட்டம் : நாளை நடக்கிறது



  • விஜயகாந்த் பேனர் அகற்றம் மணப்பாக்கத்தில் தேமுதிகவினர் சாலை மறியல்



  • மவுலிவாக்கம் கட்டிடம் விபத்து : நீதிபதி ரகுபதி அறிக்கை சட்டசபையில் தாக்கல்



  • உணவு சாப்பிட்டு சிறுவன் பலி: வடசென்னை கடைகளில் விற்கப்படும் ரச பொடியில் விஷம்?



  • மயிலாப்பூர் துணை கமிஷனர் அலுவலகம் எதிரே நின்ற போலீஸ் வாகனம் மீது தேமுதிக போஸ்டர் ஒட்டிய 2 பேர் மீது வழக்கு கட்சி நிர்வாகியும் கைதாகிறார்



  • அன்னிய பொருட்களுக்கு தடை கோரி வெள்ளையன் தலைமையில் உண்ணாவிரதம்



  • அதிமுக அரசை கண்டித்து எழும்பூர் தெற்கு பகுதி திமுக சார்பில் பொதுக்கூட்டம்



  • சென்னை அரசு பொது மருத்துவமனையில் மலிவு கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை: முதல்வர் ஜெயலலிதா தகவல்



  • இசை பல்கலை சார்பில் 75 படிப்புகள் அறிமுகம்



Facebook

Twitter

போட்டியில் முந்திய காஜல் அகர்வால்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]