இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சட்டசபை இரங்கல் கூட்டத்தில் முதல்வரை புகழ்பாடும் சபாநாயகர் மு.க.ஸ்டாலின் பேட்டி

8/24/2015 3:21:15 PM
சென்னை அரசு பொது மருத்துவமனையில் மலிவு கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை: முதல்வர் ஜெயலலிதா தகவல் மதுவிலக்கு தீர்மானத்துக்கு அனுமதி மறுப்பு திமுக உள்பட எதிர்கட்சிகள் வெளிநடப்பு சட்டசபையில் பரபரப்பு

சென்னை : சட்டசபைக்கு வெளியே இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:திமுக உட்பட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திய  நிலையில், சட்டசபை கூட்டம் தொடங்கும், தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்தோம்.தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக சட்டசபை  கூடுகிறது. இக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன்  ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்துக்கு வந்த ஜெயலலிதாவுக்கு, சபைக்கு வெளியே நாதஸ்வரம் ழுழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.  முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சிக்குக்கூட, இதுபோன்ற இசைவாத்தியங்கள் முழங்க தமிழக  முதல்வரை வரவேற்பதா?

அப்துல்கலாமுக்கு இரங்கல் தெரிவிக்க சபையின் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் பல்வேறு கட்சி உறுப்பினர்களை அழைப்பார்கள் என்று நாங்கள்  எதிர்பார்த்தோம். ஆனால், அவ்வாறு அவர்கள் அழைக்கவில்லை.அதற்குப் பதிலாக, முதல்வர் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்கே சபையில் முன்னுரிமை  அளிக்கப்படுகிறது. ஜெயலலிதா முதல்வரானதற்கு சபாநாயகர் அரைமணி நேரம் புகழாரம் சூட்டினார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும்போதே, ஏதோ நிரந்தரமாக விடுதலையானது போல் அவரை வாழ்த்துகின்றனர்.

ஆர்கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா எவ்வாறு வெற்றி பெற்றார் என்ற பிரச்னைக்கு நாங்கள் செல்லவில்லை. இருப்பினும், மகத்தான மனிதரான அப்துல்கலாம்  மறைவுக்கு சட்டசபையில் முறையாக இரங்கல் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எதுவும் முறையாக நடைபெறவில்லை..தமிழகத்தில் பூரண  மதுவிலக்கு கோரி சபாநாயகரிடம் தனிநபர் தீர்மானம் கொடுத்துள்ளோம். தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தில், இதுதொடர்பாக விவாதம் எழுப்ப கோரிக்கை  வைத்துள்ளோம்.இங்கு நடந்த சபை நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, சட்டசபை தொடர் முழுவதும் முதல்வரின் புகழ்பாடும் மன்றமாகத்தான் நடைபெறும் என்று  தோன்றுகிறது.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும் சில
  • மீனவர்களை நிர்வாணப்படுத்தி நடுக்கடலில் கொடூர தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்



  • சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் அடிப்படை வசதிகளை வலியுறுத்தி திமுக ஆர்ப்பாட்டம் : நாளை நடக்கிறது



  • விஜயகாந்த் பேனர் அகற்றம் மணப்பாக்கத்தில் தேமுதிகவினர் சாலை மறியல்



  • மவுலிவாக்கம் கட்டிடம் விபத்து : நீதிபதி ரகுபதி அறிக்கை சட்டசபையில் தாக்கல்



  • உணவு சாப்பிட்டு சிறுவன் பலி: வடசென்னை கடைகளில் விற்கப்படும் ரச பொடியில் விஷம்?



  • மயிலாப்பூர் துணை கமிஷனர் அலுவலகம் எதிரே நின்ற போலீஸ் வாகனம் மீது தேமுதிக போஸ்டர் ஒட்டிய 2 பேர் மீது வழக்கு கட்சி நிர்வாகியும் கைதாகிறார்



  • அன்னிய பொருட்களுக்கு தடை கோரி வெள்ளையன் தலைமையில் உண்ணாவிரதம்



  • அதிமுக அரசை கண்டித்து எழும்பூர் தெற்கு பகுதி திமுக சார்பில் பொதுக்கூட்டம்



  • சென்னை அரசு பொது மருத்துவமனையில் மலிவு கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை: முதல்வர் ஜெயலலிதா தகவல்



  • இசை பல்கலை சார்பில் 75 படிப்புகள் அறிமுகம்



Facebook

Twitter

போட்டியில் முந்திய காஜல் அகர்வால்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]