கவர்ச்சி நடிகை ராகினி திவேதி திடீர் மனமாற்றம்
8/24/2015 2:47:31 PM
அரியான், நிமிர்ந்து நில் படங்களில் நடித்திருப்பவர் ராகினி திவேதி. தற்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் அரசியல் கதை ஒன்றில் நடித்து வரும் நிலையில் மீண்டும் மற்றொரு அரசியல்கதையை தேர்வு செய்து நடிக்கிறார். இப்படத்துக்கு ‘நானே நெக்ஸ்ட் சி.எம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. குத்து ரம்யா படங்களில் நடித்து அரசியலுக்கு வந்தார். அந்த வரிசையில்அரசியலில் குதிக்கும் ஆசையுடன் இதுபோன்ற கதைகளை ராகினியும் தேர்வு செய்து நடிக்கிறார். முன்னதாக இவர் கிளாமர் வேடங்களில் படு கவர்ச்சியாக நடித்தது வந்தார். ராகினி ஐபிஎஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்ததில் திரும்பி பார்க்க வைத்தார். இது ஒர்க்அவுட் ஆனதால் கிளாமருக்கு முழுக்குபோட எண்ணினார். திடீர் மனமாற்றம் ஏற்பட்டதையடுத்து தற்போது அரசியல் கதைகளை அதிகம் தேர்வு செய்கிறார்.