இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கேரளாவில் விற்பனை மந்தம் எதிரொலி: தமிழகத்தில் பூக்கள் விலை சரிவு : மல்லிகை கிலோ ரூ. 100க்கு விற்பனை

8/24/2015 2:37:32 PM
சென்னை அரசு பொது மருத்துவமனையில் மலிவு கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை: முதல்வர் ஜெயலலிதா தகவல் மதுவிலக்கு தீர்மானத்துக்கு அனுமதி மறுப்பு திமுக உள்பட எதிர்கட்சிகள் வெளிநடப்பு சட்டசபையில் பரபரப்பு

ஆரல்வாய்மொழி: கேரளாவில் பூக்கள் விற்பனை மந்தமடைந்துள்ளதால் தோவாளை சந்தையில் பூக்களின் விலை சரிந்துள்ளது.தோவாளை பூ மார்க்கெட்டிற்கு தோவாளை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்கள், அண்டை மாவட்டங்கள் மற்றும் பெங்களூர், ஓசூர், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.ஓணம் பண்டிகையையொட்டி வீடுகள் தோறும் அத்தப்பூ கோலம் போடப்படும் என்பதால் கேரளாவில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் தோவாளை சந்தைக்கு வந்து பூக்கள் வாங்கிச் செல்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை ஓரளவு உயர்ந்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் பூக்கள் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சியடைந்தது. நேற்றும் தொடர்ச்சியாக பூக்கள் விலை குறைந்தது. நேற்று முன்தினம் கிலோ ரூ.250க்கு விற்ற மல்லிகை நேற்று ரூ.100க்கு விற்பனையானது. இது போல் பிச்சி ரூ.300, முல்லை ரூ.400ல் இருந்து ரூ.300, தோவாளை அரளி ரூ.120ல் இருந்து ரூ.80, சேலம் அரளி ரூ.50, சம்பங்கி ரூ.80ல் இருந்து ரூ.100, கனகாம்பரம் ரூ.200, ஆரஞ்சு கிரேந்தி ரூ.40ல் இருந்து ரூ.25, மஞ்சள் கிரேந்தி ரூ.50ல் இருந்து ரூ.25, ஸ்டெம்ரோஸ் ரூ.140ல் இருந்து ரூ.130, பட்டன்ரோஸ் ரூ.140ல் இருந்து ரூ.120, பாக்கெட் ரோஸ் ரூ.40, ஒரு தாமரை பூ ரூ.2ல் இருந்து ரூ.1 ஆககுறைந்தது.‘’ தோவாளை சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் கேரளாவில் பூக்கள் விற்பனை மந்தமாக உள்ளதால் பூக்கள் வாங்குவதற்காக தோவாளைக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது’ என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சில
  • மீனவர்களை நிர்வாணப்படுத்தி நடுக்கடலில் கொடூர தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்



  • சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் அடிப்படை வசதிகளை வலியுறுத்தி திமுக ஆர்ப்பாட்டம் : நாளை நடக்கிறது



  • விஜயகாந்த் பேனர் அகற்றம் மணப்பாக்கத்தில் தேமுதிகவினர் சாலை மறியல்



  • மவுலிவாக்கம் கட்டிடம் விபத்து : நீதிபதி ரகுபதி அறிக்கை சட்டசபையில் தாக்கல்



  • உணவு சாப்பிட்டு சிறுவன் பலி: வடசென்னை கடைகளில் விற்கப்படும் ரச பொடியில் விஷம்?



  • மயிலாப்பூர் துணை கமிஷனர் அலுவலகம் எதிரே நின்ற போலீஸ் வாகனம் மீது தேமுதிக போஸ்டர் ஒட்டிய 2 பேர் மீது வழக்கு கட்சி நிர்வாகியும் கைதாகிறார்



  • அன்னிய பொருட்களுக்கு தடை கோரி வெள்ளையன் தலைமையில் உண்ணாவிரதம்



  • அதிமுக அரசை கண்டித்து எழும்பூர் தெற்கு பகுதி திமுக சார்பில் பொதுக்கூட்டம்



  • சென்னை அரசு பொது மருத்துவமனையில் மலிவு கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை: முதல்வர் ஜெயலலிதா தகவல்



  • இசை பல்கலை சார்பில் 75 படிப்புகள் அறிமுகம்



Facebook

Twitter

போட்டியில் முந்திய காஜல் அகர்வால்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]