கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
8/22/2015 11:57:07 AM
புதுமுகங்கள் கிரிஷ்க் திவாகர், குஷ்பு பிரசாத் நடிக்கும் படம் ‘ஜிப்பா ஜிமிக்கி’. ரா.ராஜசேகர் இயக்குகிறார். அவர் கூறியது:இப்படத்தின் தலைப்புபற்றி கேட்கிறார்கள். ஜிப்பா ஆண்கள் அணியும் உடை, ஜிமிக்கி பெண்கள் அணியும் நகை. ஆண், பெண் பயணத்தை பற்றிய கதையாக இது உருவாவதால் அதை குறிக்கும் வகையில் இப்பெயர் வைக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள கூர்க் மலைப்பகுதியில் முழுபடப்பிடிப்பு நடந்துள்ளது. மலைமுகடுகளில் இதன் காட்சி படமாக்கப்பட்டது. புது ஒளிப்பதிவாளர் சரவண நடராஜன் அதனை படமாக்க உயிரை விடவும் துணிந்தார். மலைமுகடுகளில் கயிறுகட்டிக்கொள்ளாமல் தோளில் கேமராவை சுமந்து காட்சிகளை படமாக்க தயார் என்றார். அவர் தைரியம் காட்சிகளில் தெரியும். இசை அமைப்பாளர் தினாவின் சகோதரர் ரானிப் இசை அமைக்கிறார். திவாகர்.ஜி.வி. தயாரிக்கிறார். ஆடுகளம் நரேன், இளவரசு, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.