இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இளங்கோவன் நிதானத்துடன் பேசுகிறாரா? இல.கணேசன் சந்தேகம்

8/22/2015 11:52:39 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

கும்பகோணம்: கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியதாவது:மகாமக திருவிழா கும்பகோணத்தில் நடைபெற சரியாக 6மாதம் உள்ளது. பலலட்சம் மக்கள் இந்த மகாமக திருவிழாவிற்கு வருகை தந்து புனித நீராட உள்ளார்கள். வட இந்தியாவில் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெறுகிறது .அதே போல் மகாமக குளத்தில் தென்னக கும்பமேளா நடைபெற உள்ளது.கடந்த ஆண்டு திருவேணி சங்கமத்தில் நடந்த கும்பமேளா எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்துள்ளது. அதே போன்று இங்கு நடைபெற உள்ள மகாமக திருவிழாவும் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்வேன். அரசு இவ்விழாவை சிறப்பாக நடத்திட தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

வரும் பக்தர்களுக்கு சுத்தம், சுகாதாரம் குறைபாடு இல்லாமல் இருக்கவேண்டும். சாலைவசதிகள் நன்கு இருக்கவேண்டும். இந்தவிழா தேசிய திருவிழாவாகும். இந்த விழாவை சிறப்பாக நடத்த மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தவறாக பேசிவிட்டேன் என கூறி இருந்தால் இந்த அளவிற்கு போராட்டங்கள் நடைபெற்றிருக்காது. மீண்டும் மீண்டும் அவரது பேச்சால்தான் போராட்டங்கள் நடைபெற்றது. அவர் நிதானத்தில்தான் பேசுகிறாரா என சந்தேகமாக உள்ளது. அவர் போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும். மத்தியில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் தரம்தாழ்ந்துவிட்டது. பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்படும் தமிழக பாலை சோதனை செய்யும் கேரள அதிகாரிகள்



  • நீலகிரியில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவல்: போலீசார் தீவிர தேடுதல்



  • கோடநாடு எஸ்டேட்டில் பள்ளி மூடல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்



  • மதுவை எதிர்த்து கரசங்காலில் இன்று திமுக மகளிர் மாநாடு



  • மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பவே இளங்கோவன் கொடும்பாவி எரிக்கப்படுகிறது: விஜயகாந்த் பேச்சு



  • மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு : தா.மோ. அன்பரசன் அறிக்கை



  • இன்று மாலை நடைபெறும் மதுவிலக்குக்கு எதிரான திமுக மகளிரணி மாநாடு : ஆதனூர் ஊராட்சி திமுக சிறப்பு ஏற்பாடு



  • குண்டும், குழியுமாகி பழுதான வாலாஜாபாத் சாலை வாகன ஓட்டிகள் அவதி



  • இளங்கோவனை கண்டித்து மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம்



  • மது ஒழிப்பு மகளிர் அணி மாநாட்டில் ஆப்பூர் ஊராட்சியில் இருந்து 2000 பேர் பங்கேற்பு



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]