இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மதுவை எதிர்த்து கரசங்காலில் இன்று திமுக மகளிர் மாநாடு

8/22/2015 11:49:39 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்காலில் திமுக மகளிர் அணி சார்பில் மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடு இன்று நடக்கிறது. இதில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.திமுக மகளிர் அணி சார்பில் மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை வாலாஜாபாத் சாலையில் உள்ள கரசங்காலில் இன்று மாலை 3 மணியளவில் நடக்கிறது. 100 ஏக்கர் பரப்பளவில் 30 ஆயிரம் மகளிர் அமரும் வகையில் பிரம்மாண்ட மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.  மாநாடு பந்தலில் பெண்கள் மட்டுமே அனுதிக்கப்பட உள்ளதால் கட்சியின் பிற நிர்வாகிகள் கட்சி தலைவர் பேசுவதை கேட்க ஆங்காங்கே பெரிய திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் நுழைவு வாயில் தஞ்சாவூர் ஓலையில் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநாடு நடைபெறும் இடத்தை நேற்று ஆய்வு செய்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

மதுவை எதிர்ப்பது மட்டுமின்றி திமுக ஆட்சியில்  மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்த திமுக தலைவர் கருணாநிதிக்கு  நன்றி தெரிவிக்கும் வகையிலும் இம்மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுக்கு மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி தலைமை வகிக்கிறார். மகளிர் அணி புரவலர் நூர்ஜகான் பேகம், துணை தலைவர் சங்கரி நாராயணன், காஞ்சி  வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட  செயலாளர் க.சுந்தர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மகளிர் அணி தலைவர் டாக்டர் காஞ்சனா கமலநாதன் வரவேற்புரையாற்றுகிறார். மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இம்மாநாட்டில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொது செயலாளர்கள் சற்குணபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், நாகர்கோயில் மகளிர் கிறிஸ்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சிந்தி கெயாள் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் நன்றி கூறுகிறார்.

முன்னதாக மாலை 3 மணியளவில் சின்ன பொன்னுகுமார் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணியினர் வருவதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரில் இருந்து மாநாடு நடைபெறும் இடம் வரை சாலையின் இருபுறங்களிலும் வரவேற்பு பேனர்கள், திமுக கொடி, தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மலர்விழி தமிழ் அமுதன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வனஜா தயாளன், காஞ்சிபுரம் ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் ஜெ.கே.தினேஷ், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஏ.வி.எம்.நித்யா ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில், மாவட்ட ஆதி திராவிட நல குழு உறுப்பினர் தி.க.பாஸ்கரன்,ஒன்றிய செயலாளர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன்,வாலாஜா பாத் ஒன்றிய நத்தாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அமலி சுதா முனுசாமி, வாலாஜா பாத் பேரூர் மாணவரணி அமைப்பாளர் மோகன், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் வி.எஸ்.ராமகிருஷ்ணன், த.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு மாவட்டங்களை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி, இளைஞரணி, விவசாய அணி, தொண்டர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட அணிகளின் அமைப்பாளர்கள் அனைத்து நிர்வாகிகளும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.  

மேலும் சில
  • டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்படும் தமிழக பாலை சோதனை செய்யும் கேரள அதிகாரிகள்



  • நீலகிரியில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவல்: போலீசார் தீவிர தேடுதல்



  • கோடநாடு எஸ்டேட்டில் பள்ளி மூடல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்



  • இளங்கோவன் நிதானத்துடன் பேசுகிறாரா? இல.கணேசன் சந்தேகம்



  • மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பவே இளங்கோவன் கொடும்பாவி எரிக்கப்படுகிறது: விஜயகாந்த் பேச்சு



  • மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு : தா.மோ. அன்பரசன் அறிக்கை



  • இன்று மாலை நடைபெறும் மதுவிலக்குக்கு எதிரான திமுக மகளிரணி மாநாடு : ஆதனூர் ஊராட்சி திமுக சிறப்பு ஏற்பாடு



  • குண்டும், குழியுமாகி பழுதான வாலாஜாபாத் சாலை வாகன ஓட்டிகள் அவதி



  • இளங்கோவனை கண்டித்து மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம்



  • மது ஒழிப்பு மகளிர் அணி மாநாட்டில் ஆப்பூர் ஊராட்சியில் இருந்து 2000 பேர் பங்கேற்பு



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]