திருவள்ளூரில் வருவாய் திட்ட முகாம்
8/22/2015 11:44:12 AM
திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற வருவாய் திட்ட முகாமில் பெறப்பட்ட 195 மனுக்களில் 43 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது. முகாமிற்கு தாசில்தார் கணேஷ்சிங் தலைமை வகித்தார். நகர மன்றத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாமில் ஜாதி சான்றிதழ் கோரி 18 மனுக்கள், முதியோர் உதவித்தொகை கோரி 110 மனுக்கள், பட்டா கேட்டு 3 மனுக்கள் உட்பட மொத்தம் 195 மனுக்கள் பெறப்பட்டன.இதில், திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் கமாண்டோ ஏ.பாஸ்கரன் பங்கேற்று முகாமில் பெறப்பட்ட மனுக்களில் உடனடித் தீர்வாக ஜாதி சான்றிதழ், திருத்தம் செய்யப்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் காளிராஜன், புகழேந்தி, திருமால், கேசவன், பாத்திமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.