இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இளங்கோவன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு : டெல்லி விரைந்தனர் தனிப்படை போலீசார்

8/22/2015 11:38:58 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாதபடி 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர்.பிரதமர் மோடி சென்னைக்கு சமீபத்தில் வந்தபோது, முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து பேசிய இளங்கோவன், சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து கடந்த ஒரு வாரமாக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சத்தியமூர்த்திபவன் தாக்கப்பட்டது. இளங்கோவன் வீட்டை முற்றுகையிட்டும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சியில் நேற்று காலையில் காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்டது.தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில், இளங்கோவன் மீது சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் ஊழியராக பணியாற்றி வந்த வளர்மதி என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில், காமராஜர் அரங்கத்தில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் அதற்கு மாநில தலைவர் இளங்கோவன், நிர்வாகி நாராயணன் ஆகியோர்தான் காரணம் என்றும் கூறியிருந்தார். இது குறித்து கேட்டபோது தன்னை வேலையை விட்டு நீக்கியதோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார்.இந்தப் புகார் மீது தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இது குறித்து இணை கமிஷனர் அருண், துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் சிவபாஸ்கர், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தப் படையினர், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்திய தண்டனைச் சட்டம் 323, 509, 354, 506(1) மேலும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம்,406, 420 ஆகிய 7 பிரிவுகளின் கீழ் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர் கீழ்கோர்ட்டில் ஜாமீன் பெற முடியாது. செஷன்ஸ் அல்லது ஐகோர்ட்டில்தான் ஜாமீன் பெற முடியும். இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோவன் ஜாமீன் கேட்டு நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி வைத்தியநாதன், கைது செய்வதற்கு இடைக்காத தடை  பிறப்பிக்க முடியாது. விசாரணை திங்கள்கிழமை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மாலையில் திடீரென்று இளங்கோவன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் அவர், நண்பர்கள் வீட்டில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

 மேலிட தலைவர்களையும் அவர் நேற்று மாலை சந்தித்து இந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், இளங்கோவன் மீதான புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசில் ஒரு பிரிவினர் இன்று காலையில் டெல்லி சென்றுள்ளதாகவும், அவர்களுக்கு உதவியாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் இளங்கோவனை அவர்கள் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து சென்னை போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, முகாந்திரம் இருந்ததால்தான் வழக்குப்பதிவு செய்வோம். இப்போதைக்கு வழக்குப்பதிவு செய்துள்ளோம். அதேபோல தேவைப்பட்டால் கைது நடவடிக்கைகளையும் எடுப்போம். வேறு விவரங்கள் எதுவும் தெரிவிக்க முடியாது என்றார்.இளங்கோவனை கைது செய்ய தனிப்படை டெல்லி சென்றுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்படும் தமிழக பாலை சோதனை செய்யும் கேரள அதிகாரிகள்



  • நீலகிரியில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவல்: போலீசார் தீவிர தேடுதல்



  • கோடநாடு எஸ்டேட்டில் பள்ளி மூடல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்



  • இளங்கோவன் நிதானத்துடன் பேசுகிறாரா? இல.கணேசன் சந்தேகம்



  • மதுவை எதிர்த்து கரசங்காலில் இன்று திமுக மகளிர் மாநாடு



  • மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பவே இளங்கோவன் கொடும்பாவி எரிக்கப்படுகிறது: விஜயகாந்த் பேச்சு



  • மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு : தா.மோ. அன்பரசன் அறிக்கை



  • இன்று மாலை நடைபெறும் மதுவிலக்குக்கு எதிரான திமுக மகளிரணி மாநாடு : ஆதனூர் ஊராட்சி திமுக சிறப்பு ஏற்பாடு



  • குண்டும், குழியுமாகி பழுதான வாலாஜாபாத் சாலை வாகன ஓட்டிகள் அவதி



  • இளங்கோவனை கண்டித்து மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம்



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]