சேலத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்
8/21/2015 3:24:54 PM
சேலம்: நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகிகளுடன், அதன் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் ஆலோசனை நடத்தி பயிற்சி முகாமை நடத்தி வருகிறார். இதன்படி தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரள மாநில நிர்வாகிகளுக்கான 3 நாள் பயிற்சி முகாம் சேலம் மரவனேரியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இன்று முதல் 23ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.இன்று காலை 10 மணிக்கு பயிற்சி முகாம் துவங்கியது. முகாமில் பங்கேற்க அகில இந்திய தலைவர் மோகன் பகவத், காலையில் பெங்களூரில் இருந்து சேலம் வந்தார். அவர் கூட்டத்தை துவங்கி வைத்து, ஆலோசனைகளை வழங்கினார். இம்முகாமில் 100க்கும் அதிகமான ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.