கள்ளச்சாராயம் பெண்கள் உள்பட 28 பேர் கைது
8/21/2015 3:23:59 PM
பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே சாத்கர்மலை, கள்ளச்சேரி, கோட்டைச்சேரி, அம்பேத்கர் நகர் மற்றும் பேரணாம்பட்டு டவுன் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.இதையடுத்து எஸ்.பி.செந்தில்குமாரி நேற்று பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் மலையில் ரெய்டில் ஈடுபட்டார். நேற்று முதல் இன்று அதிகாலை வரை விடிய, விடிய நடந்த கள்ளச்சாராய வேட்டையில் 26 கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் குடியாத்தம் தாலுகா பகுதியில் 2 கள்ளச்சாராய வியாபாரிகள் என மொத்தம் 5 பெண்கள் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.