இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

நியூசி.யுடன் முதல் ஒன் டே; தென் ஆப்பிரிக்கா சூப்பர் வெற்றி

8/20/2015 2:38:59 PM
காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்காலில் நாளை நடக்கிறது மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடு கருணாநிதி, ஸ்டாலின் பங்கேற்பு அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் : 10 நாட்களுக்குள் 2வது முறையாக

செஞ்சூரியன்:  நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரின் முதல் ஆட்டம் நேற்று செஞ்சூரியன் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசியது. தென் ஆப்பிரிக்க துவக்க வீரர் வான்விக் 16 ரன்னில் வெளியேற, ஆம்லாவுடன், ரைலீ ரிசவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நியூசி. பந்து வீச்சை அபாரமாக எதிர்கொண்டு ரன் குவித்தனர். அணியின் ஸ்கோர் 231 ஆக இருந்த போது ரிசவ் 89 ரன்னில் (112 பந்து 6 பவுண்டரி, 3 சி்க்சர்) ஆட்டம் இழந்தார். இருவரும் 2வது விக்கெட்டிற்கு 185 ரன் குவித்தனர். அடுத்து வந்த கேப்டன் டிவில்லியர்ஸ் 9 ரன்னில் வெளியேறினார். மறுபுறம் சிறப்பாக ஆடி சதம் விளாசிய ஆம்லா 124 ரன் குவித்து (126 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) மில்னி பந்தில் போல்டானார். 50 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 304 ரன் குவித்தது.பின்னர் கடின இலக்குடன் களம் இறங்கிய நியூசி.யின் துவக்க வீரர் ரோஞ்சி ஒரு ரன்னில் ஸ்டெயின் பந்தில் ஆட்டம் இழக்க, கேப்டன் வில்லியம்சனுடன் லதாம் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து 2வது விக்கெட்டிற்கு 104 ரன் சேர்த்த நிலையில், வில்லியம்சன் 47 ரன்னிலும், லதாம் 60 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த கப்தில் 25, நீஷாம் 41, முன்றோ 33 ரன்னில் வெளியேற நியூசி. அணி 48.1 ஓவரில் 284 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 20 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை அரையிறுதி தோல்விக்கு தெ.ஆ. பழி தீர்த்துக் கொண்டது. சதம் விளாசிய ஆம்லா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

மேலும் சில
  • ஆஷஸ் கடைசி டெஸ்ட் ஆஸி. சிறப்பான தொடக்கம்



  • வீணான சிறந்த பகுதியை மீண்டும் பெற முடியாது : சல்மான் பட் ஆதங்கம்



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்



  • சானியா மிர்சா என்னுடைய அதிர்ஷ்டம் சோயீப் மாலிக் பேட்டி



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ஜோகோவிச், செரீனா



  • இலங்கையுடன் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம் : வெற்றி நெருக்கடியில் களம் இறங்கும் இந்தியா



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ரோஜர் பெடரர்



  • ரோகித் சர்மா மோசமான ஆட்டம் கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா? கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா?



  • உலக நம்பர் 1 இடத்தை மீண்டும் பிடிக்கிறார் சாய்னா



  • உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம்



Facebook

Twitter

சமந்தாவை கண்காணிக்கும் இயக்குனர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]