பிரபுதேவா புது திட்டம் டிராப்?
8/20/2015 2:38:16 PM
நடிப்பு, இயக்கம், நடன இயக்கம் என மல்டி பணிகளில் ஈடுபட்டிருக்கும் பிரபுதேவா அடுத்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 3 படங்கள் தயாரிக்கிறார். ஏற்கனவே நடிப்பிலிருந்து ஒதுங்கி இருக்கும் ஷோபனா உள்ளிட்ட சில நடிகைகள் நடன பள்ளி தொடங்கி நடத்தி வருகின்றனர். நடனத்தில் பெயர் பெற்ற பிரபுதேவாவும் நடன பள்ளி தொடங்க திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே கூறி இருந்தார். ஆனால் அந்த திட்டத்தை தற்போது டிராப் செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘நடன பள்ளி ஒன்று தொடங்க எண்ணி இருந்தேன். தற்போது அதற்கான ஆற்றல் எனக்கு இருக்குமா என்று சந்தேகம் எழுகிறது. தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என பல்வேறு பணிகளில் கவனம் செலுத்துகிறேன். எனது குழந்தைகளை கவனிக்க வேண்டிய முக்கிய பொறுப்பும் இருக்கிறது. இப்போதுள்ள சூழலிலேயே அவர்களுடன் என்னால் போதுமான நேரம் செலவழிக்க முடியவில்லை. நடன பள்ளி தொடங்கினால் அதில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். அது அப்படிப்பட்ட தொழில். தொடங்கினோம், சில மாதத்தில் மூடினோம் என்று செய்துவிட முடியாது’ என்றார்.