இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சோனியா, ராகுல் வழக்கில் மெத்தனம் எதிரொலி: அமலாக்கத்துறை இயக்குநர் டிஸ்மிஸ் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

8/20/2015 2:15:18 PM
காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்காலில் நாளை நடக்கிறது மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடு கருணாநிதி, ஸ்டாலின் பங்கேற்பு அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் : 10 நாட்களுக்குள் 2வது முறையாக

புதுடெல்லி: அமலாக்கத்துறை இயக்குநராக இருந்த ராஜன் எஸ்.கடோச் அந்த பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அமலாக்கப்பிரிவு மத்திய பிராந்தியத்தின் சிறப்பு இயக்குநராக இருந்த கர்னல் சிங் தற்ேபாது புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கனரக தொழில்துறை செயலாளராக இருந்த ராஜன் எஸ்.கடோச் அமலாக்கப்பிரிவு இயக்குநராக கடந்த ஆண்டு நியமிக்கப்படடார். தொழில்துறை செயலாளர் பதவியுடன் கூடுதலாக இந்த பணியை அவர் கவனித்து வந்தார். கடந்த மாதம் அவரது பதவியை மேலும் 3 மாதத்துக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் திடீரென அவர் நேற்று இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது இடத்தில் இதுவரை அமலாக்கப்பிரிவின் மத்திய பிராந்திய சிறப்பு இயக்குநராக இருந்த கர்னல்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்னல் சிங் அடுத்த 3 மாதத்துக்கு அமலாக்கப்பிரிவு இயக்குநராக செயல்படுவார் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.ராஜன் கடோச் கடந்த 6 மாதமாகவே அமலாக்கப்பிரிவு இயக்குநர் பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் சோனியா மற்றும் ராகுல் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கு அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு வந்தது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கடந்த 1938ம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டது. இந்த பத்திரிகைக்கு டெல்லியில் பிரதான இடத்தில் சொத்துக்கள் உள்ளன. இவற்றை யங் இந்தியன் என்ற அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது. யங் இந்தியன் அறக்கட்டளையில் சோனியா மற்றும் ராகுல் உறுப்பினராக உள்ளனர். கோடிக்கணக்கான சொத்துக்களை சோனியாவும், ராகுலும் சட்டவிரோதமாக மாற்றிக் கொண்டதாக பாஜ தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டினார்.

 இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த வழக்கு சூடு பிடித்தது. சோனியாவுக்கும் ராகுலுக்கும் டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு டெல்லி ஐகோர்ட்டில் சோனியாவும், ராகுலும் தடை வாங்கினார்கள். இந்த தடை தற்போதுவரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பங்கு பரிமாற்றம் குறித்து வருமானவரி மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியது. இந்நிலையில் தான் சோனியா மற்றும் ராகுல் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கை முடித்துக் கொள்ள அமலாக்கப்பிரிவு முடிவு செய்தது. இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு இயக்குநர் கடோச், சோனியா மற்றும் ராகுல் மீது வழக்கு தொடர முகாந்திரம் இல்லை என வருவாய் ெசயலருக்கு கடிதம் எழுதினார். இந்த வழக்கை முடித்துக் கொள்வதாகவும் அறிவித்தார். இதற்கு பாஜ தலைவர் சுப்பிரமணிய சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அமலாக்கப்பிரிவு சரியாக விசாரணை நடத்தவில்லை என குற்றம் சாட்டினார்.  இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதமும் எழுதியிருந்தார். இந்த நிலையில் கடோச்சிடமிருந்து அமலாக்கப்பிரிவு இயக்குநர் பதவியை மத்திய அரசு பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி விழாவில் ஜீப் மோதி படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி சாவு: 12 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு



  • ஆந்திராவில் பழிவாங்கும் ஆட்சி நடக்கிறது : நடிகை ரோஜா குற்றசாட்டு



  • பிரிவினைவாத தலைவர்களை சந்தித்தால் பேச்சு வார்த்தையை ரத்து செய்வோம் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை



  • அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் : 10 நாட்களுக்குள் 2வது முறையாக



  • ரக்‌ஷா பந்தன் பண்டிகைக்கு மோடியை சந்திக்க சகோதரி விருப்பம் : ராக்கியை தபாலில் அனுப்பினார்



  • மாநிலங்களை ஏலம் விடும் பிரதமர் மோடி காங்கிரஸ் கடும் தாக்கு



  • பீகாருக்கு ரூ. 1.25 லட்சம் கோடி சிறப்பு நிதி அறிவித்த பிரதமர் மோடிக்கு எதிராக பிராந்திய கட்சிகள் போர்க்கொடி



  • புனே திரைப்பட கல்லூரியில் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஜாமீனில் விடுதலை



  • அடுத்த ஒரு வாரத்துக்குள் ஆயுள் கைதிகள் 150 பேரை விடுவிக்க மகாராஷ்டிர அரசு முடிவு



  • பாகிஸ்தான் அழைப்பு எதிரொலி : காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு வீட்டுக் காவல்



Facebook

Twitter

சமந்தாவை கண்காணிக்கும் இயக்குனர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]