இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அப்துல் கலாம் அடக்கத்திற்கு குழிதோண்டியவர் பற்றி சுவராஸ்யம்

7/31/2015 3:30:07 PM
டெங்கு காய்ச்சல் தடுக்கும் பப்பாளி இலைச்சாறு ரஷ்யா-உக்ரைன் இடையே விமான போக்குவரத்து நிறுத்தம்

சென்னை: அப்துல்கலாம் உடல் அடக்கத்திற்கான குழிதோண்டியவர் குறித்த சுவராஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.அப்துல் கலாம் உடலை அடக்கம்  செய்வதற்கான குழியை தோண்டியவர் கணேசன்(54). அங்குள்ள ஜும்மா மசூதியில் தூய்மை செய்யும் பணி செய்கிறார். கூடவே இறந்தவர்களை அடக்கம் செய்யும்  பணியும் அவருடையதுதான். அப்துல்லாம் 2 மாதங்களுக்கு முன் மசூதிக்கு வந்தபோதுதான் முதல் முறையாக பாரத்திருக்கிறார். அதற்கு முன்பு அவரரைப்பற்றி  கேள்விப்பட்டதோடு சரி. அதுவும் பெரிய விஞ்ஞானி, ஜனாதிபதியாக இருந்தவர், மக்களுக்கு மிகவும் பிடித்தவர் என்று கேள்விப்பட்டேன். அவர் நி்றைய பணம்  சம்பாதிக்கவில்லை போல், அவர்கள் குடும்பத்தினர் சின்ன வீட்டில்தான் வசிக்கின்றனர்’ என்று மனதில் பட்டதை பட்டென்று சொல்கிறார். கணேசன் நேற்றுக் காலைதான் கலாம் அடக்கம் செய்வதற்கான குழியை தோண்டியுள்ளார். மணல் பகுதி என்பதால் குழி தோண்டுவது மிகவும் சிரமமாம்.  அதனால் பனைமரக் கழிகளை தடுப்புகளாக பயன்படுத்தி குழி எடுப்பாராம். இப்போது மரப்பலகைகளை பயன்படுத்தியுள்ளார். குழியை 3 அடி அகலம் 7 அடி  நீளத்தில் தோண்டியுள்ளார். தொழிலதிபர், மீனவர், ஏழை, பணக்காரன் என எல்லோருக்கும் குழி தோண்டியிருக்கிறேன். இந்த மாதத்தில் இது 4வது குழி  என்கிறார்  கணேசன்.

ஒரு குழி தோண்ட 1300 ரூபாய் வரை தருவார்கள். மற்ற நாட்களில் மசூதியை தூய்மை செய்யும் பணியை செய்வேன். அதற்கு ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூலி.  வேறு வேலை ஏதாவது கிடைத்தாலும் செய்வாராம். பெரும்பாலும் மசூதி வேலைதான். கணேசன் கதையும் சோகம், கஷ்டம், அவ்வப்போது மகிழ்ச்சி என  திருப்பங்களை கொண்டதுதான். கணேசன் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை இறந்து விட்டாராம். பிறந்ததும் தாய் இறந்து விட்டாராம்.  உறவினர் வீட்டில் 10  வயது வரை வளர்ந்துள்ளார்.அதன் பிறகு கிடைத்த வேலையை செய்து பிழைத்தவருக்கு  16 வயதில் காதல் கை கொடுத்துள்ளது. அந்த காதலால் 14 வயது  சோனாட்சியை  திருமணம் செய்துள்ளார். காதல் என்றாலும ஒரே சாதி என்பதால் பிரச்னை ஏற்படவில்லையாம். இப்போது அவர்களுக்கு 2 பையன், ஒரு பெண்.  இந்நிலையில்   சோனாட்சியின்  தோழி  லட்சுமி என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு மணந்துள்ளார்.விதவையான லட்சுமியை மணந்ததில் சோனாட்சிக்கு  எந்த வருத்தமும் இல்லையாம். இன்றும் இரண்டு பேரும் தோழிகளாக இருக்கின்றனர். தனி தனி வீடுகளில் வசித்தாலும் வாரத்திற்கு ஒரு முறையாவது இரண்டு  பேரும் சந்தித்து விடுவார்கள். லட்சுமி மூலம் 8 வயது பெண் குழந்தை உள்ளது.

மேலும் சில
  • டெங்கு காய்ச்சல் தடுக்கும் பப்பாளி இலைச்சாறு



  • தாம்பரம் அருகே ரயில்களில் அடிபட்டு 2 பேர் பலி



  • மரணமடைந்த காவலர்களின் குடும்பங்களுக்குரூ3 லட்சம் நிதி உதவி: முதல்வர் அறிவிப்பு



  • கொளத்துார் வட்ட கழக பொறுப்பாளர்கள் நியமனம்: திமுக அறிவிப்பு



  • விடியல் மீட்பு பயண பிரசார கூட்டம்: கும்மிடிப்பூண்டி கி.வேணு பங்கேற்பு



  • திருவள்ளூர் அருகே மின் கேபிள் அறுந்தது ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி



  • காஞ்சிபுரம் அருகே 2 விபத்து கார் கவிழ்ந்து 2 பேர் பலி



  • ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இன்ஜின் பழுது சென்னை ரயில்கள் 3 மணிநேரம் தாமதம்



  • தீர்மான குழு துணை தலைவர் நியமனம் : திமுக அறிவிப்பு



  • நவ.30க்குள் தேர்தல் நிதி அளிக்க வேண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்



Facebook

Twitter

திரைப்படமாகும் குறும்படங்கள்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]