இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

புதிய அணை கட்டும் விவகாரம் கேரளாவுக்கு துணை போகக்கூடாது : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

6/11/2025 3:19:32 PM
இந்திய தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசுகிறார்களாம் : பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் புலம்பல் பீகார் முதல்வராக விருப்பம் இல்லை : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக  கடந்தாண்டு மே 7ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கேரளா மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. அதை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.   ஆனாலும் கேரளா இடுக்கி மாவட்டத்தில் புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக கேரளா அரசு செயல்பட்டு வருகிறது.  இந்த நிலையில் புதிய அணை கட்ட கேரளா அரசு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரி மனு அளித்துள்ளது.

தமிழக அரசு, புதிய அணை கட்ட கூடாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இதன் மீதான விசாரணை வரும் ஜூலை மாதத்திற்கு  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்த சூழ்நிலையில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆய்வு செய்தது. ஆனாலும், கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் புதிய அணை கட்டுவது தொடர்பாக இதுவரை அனுமதி கொடுக்கவில்லை என்று கடந்த 4ம் தேதி சுற்றுச்சூழல்  அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு கேரளா அரசின் தவறான நடவடிக்கையை தடுக்கும் வகையில் சுற்றுச்சூழல்  அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • குறுவைக்கு இன்று மேட்டூர் திறப்பு இல்லை: டெல்டா விவசாயிகள் கவலை



  • மணலி மண்டலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்



  • ராகுல்காந்தி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவோம் : ஈவிகேஎஸ்.இளங்கோவன் அறிக்கை



  • நன்மங்கலம் காப்பு காட்டில் குட்டையில் குளித்த மாணவன் மாயம்



  • ஆர்கே. நகர் தொகுதியில் அதிமுக அலுவலகமாக மாறிய அரசு அச்சக ஊழியர்கள் சங்கம்



  • குழந்தை தொழிலாளர் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறவேண்டும் : தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்க மாணவிகள் வலியுறுத்தல்



  • புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் டேனிஷ் கோட்டை நுழைவு வாயில்



  • ஆடல், பாடல் சுகமா.... சோகமா...!



  • ரூ. 30 செலுத்தினால் பிளாஸ்டிக் ஆதார் அட்டை



  • 2 பேரை பலி வாங்கிய கதண்டுகள் அழிப்பு



Facebook

Twitter

விஜய் பட வாய்ப்பு மிஸ் செய்த பாவனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]