இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை ரேண்டம் எண் வெளியீடு

6/11/2025 3:18:21 PM
இந்திய தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசுகிறார்களாம் : பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் புலம்பல் பீகார் முதல்வராக விருப்பம் இல்லை : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 20 அரசு  மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 2 ஆயிரத்து 655 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு 398 இடங்கள் போக 2,257 இடம்  தமிழக மாணவர்களுக்கு உள்ளது. இதே போல், சென்னையில் அரசு பல் மருத்துவ கல்லூரி ஒன்றும் உள்ளது. இதில் அகில இந்திய ஒதுக்கீடு 15 போக 85  இடங்கள் உள்ளது. இது தவிர தமிழ்நாட்டில் 7 சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மூலம் 780 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைத்துள்ளது. அதே போல 23 தனியார்  சுயநிதி பல் மருத்துவ கல்லூரி 1432 இடங்கள் அரசுக்கு கிடைத்துள்ளன.  உள்ளன. இந்த இடங்களுக்கான, 2015-2016ம் கல்வியாண்டிற்கான  மாணவர் சேர்க்கை  விண்ணப்ப விநியோகம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த மே மாதம் 11ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 28ம்  தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 35 ஆயிரத்து 667  விண்ணப்பங்கள் விற்பனையானது.

அதேபோல, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் மே  29ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட்டது. மொத்தம் 32 ஆயிரத்து 184 விண்ணப்பங்கள்  சமர்ப்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு கீழ்ப்பாக்கத்தில்   மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் மருத்துவ கல்வி இயக்குனர் கீதா லட்சுமி ரேண்டம் எண்ணை வெளியிட்டார். ரேண்டம் எண்  7532186345 எண்ணை  தொடக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இது குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் கீதா லட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவ மாணவருக்கான  ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. www.tnhealth.org என்ற இணையதளத்தில் சென்று 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் பதிவு எண் மற்றும் பிறந்த  தேதியை பதிவிட்டு தங்களது ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ளலாம். ரேண்டம் எனப்படுவது பல மாணவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறும் பட்சத்தில்  அவர்களை வரிசை படுத்துவதற்காக கடைசியாக பயன்படுத்தப்படும் எண்ணாகும். ஒரே மதிப்பெண்  பெற்ற மாணவர்களை வரிசை படுத்த முதலில் உயிரியல்  மதிப்பெண் எடுத்து கொள்ளப்படும்.


 அதுவும் ஒன்று போல் இருந்தால் வேதியியல் மதிப்பெண்ணும், அதுவும் ஒன்று போல் என்றால் அடுத்து கணக்கு மதிப்பெண், அதுவும் ஒரே மாதிரி இருந்தால்  பிறந்த தேதி, அதுவும் ஒன்று போல் இருந்தால் கடைசியாக ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். ரேண்டம் எண்ணில் முதலில் இருக்கும் மாணவருக்கு  முன்னுரிமை வழங்கப்படும். கடந்த ஆண்டு 124 மாணவர்கள் ஒரே மார்க் பெற்று இருந்தனர். அவர்களில் 68 பேருக்கு ரேண்டம் எண் பயன்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது.12ம் வகுப்பு மறுமதிப்பீடு மார்க் வந்தவுடன் அதிலிருந்து இரண்டு நாள் கழித்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன்படி வரும் ஜூன் 15ம்  தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளது. 19ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் முதற்கட்ட கவுன்சலிங் நடைபெற வாய்ப்புள்ளது.

கே.கே நகரில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிக்கு இந்தாண்டு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கூடுதலாக 65 இடங்கள்  அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும்.இந்தாண்டு கவுன்சலிங் ஓமந்தூரார் அரசினர் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் பிளாக் ஏவில் நடைபெறும். இவ்வாறு அவர்  கூறினார். இதுவரை தமிழகத்தில் 7 தனியார் மருத்துவகல்லூரிக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி, கோவை கற்பகம்  மருத்துவ கல்லூரி, சென்னை கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி, சென்னை தாகூர் மருத்துவகல்லூரி, மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி, நாகர்கோவில்  மூகாம்பிகை மருத்துவகல்லூரி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் அடங்கும்.

மேலும் சில
  • குறுவைக்கு இன்று மேட்டூர் திறப்பு இல்லை: டெல்டா விவசாயிகள் கவலை



  • மணலி மண்டலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்



  • ராகுல்காந்தி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவோம் : ஈவிகேஎஸ்.இளங்கோவன் அறிக்கை



  • நன்மங்கலம் காப்பு காட்டில் குட்டையில் குளித்த மாணவன் மாயம்



  • ஆர்கே. நகர் தொகுதியில் அதிமுக அலுவலகமாக மாறிய அரசு அச்சக ஊழியர்கள் சங்கம்



  • குழந்தை தொழிலாளர் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறவேண்டும் : தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்க மாணவிகள் வலியுறுத்தல்



  • புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் டேனிஷ் கோட்டை நுழைவு வாயில்



  • ஆடல், பாடல் சுகமா.... சோகமா...!



  • ரூ. 30 செலுத்தினால் பிளாஸ்டிக் ஆதார் அட்டை



  • 2 பேரை பலி வாங்கிய கதண்டுகள் அழிப்பு



Facebook

Twitter

விஜய் பட வாய்ப்பு மிஸ் செய்த பாவனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]