இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

விடைத்தாளை மாற்றி மாணவியை பெயிலாக்கிய கொடுமை ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை கல்வித்துறையில் அவலம்

6/11/2025 2:47:37 PM
இந்திய தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசுகிறார்களாம் : பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் புலம்பல் பீகார் முதல்வராக விருப்பம் இல்லை : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. சமையல் தொழிலாளி. இவரது மகள் கவிதாமணி. கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 கணக்கு பதிவியல் பாடம் எடுத்து படித்து வந்தார்.கடந்த மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. அதில் இவர் மொத்தம் 584 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்ததாக முடிவு வெளியானது. இவர் பொருளாதார பாடத்தில் 200க்கு 24 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவியோ, கண்டிப்பாக இவ்வளவு குறைவான மதிப்பெண் வர வாய்ப்பு இல்லை. எனவே தான் தேர்வு எழுதிய விடைத்தாள் நகலை பெற்று பார்க்க வேண்டும் என அதற்கான தொகையினை செலுத்தி விடைத்தாளை பெற்றுள்ளார். அதில் மாணவி கவிதாமணியின் பெயர் மற்றும் பதிவு எண்ணும் இருந்துள்ளது.

ஆனால் விடைத்தாள் அவர் எழுதியது இல்லை என்பதும், அந்த விடைத்தாளில் வேறு ஒருவரின் கையெழுத்து இருந்தது என்பதையும் பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து தான் படித்த பள்ளியை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அவர்களும் அந்த கையெழுத்து மாணவி கவிதாமணியின் கையெழுத்து இல்லை என்பதை உறுதி செய்தனர்.இது குறித்து கல்வித்துறையில் அளித்த புகாரினை தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாணவியின் விடைத்தாள் மறுகூட்டல் செய்து மாணவி கவிதாமணி 124 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடைத்தாள் மாறியது குறித்து சென்னையில் உயர் அலுவலர்கள் வேலூரில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவி பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டில் தொடரும் முறைகேடு புகார்களால் பெற்றோர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் பகிர்வு, விடைத்தாள் நகல் மாற்றம் உள்ளிட்ட தொடரும் குளறுபடிகளால் கல்வித்துறை மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் சில
  • குறுவைக்கு இன்று மேட்டூர் திறப்பு இல்லை: டெல்டா விவசாயிகள் கவலை



  • மணலி மண்டலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்



  • ராகுல்காந்தி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவோம் : ஈவிகேஎஸ்.இளங்கோவன் அறிக்கை



  • நன்மங்கலம் காப்பு காட்டில் குட்டையில் குளித்த மாணவன் மாயம்



  • ஆர்கே. நகர் தொகுதியில் அதிமுக அலுவலகமாக மாறிய அரசு அச்சக ஊழியர்கள் சங்கம்



  • குழந்தை தொழிலாளர் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறவேண்டும் : தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்க மாணவிகள் வலியுறுத்தல்



  • புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் டேனிஷ் கோட்டை நுழைவு வாயில்



  • ஆடல், பாடல் சுகமா.... சோகமா...!



  • ரூ. 30 செலுத்தினால் பிளாஸ்டிக் ஆதார் அட்டை



  • 2 பேரை பலி வாங்கிய கதண்டுகள் அழிப்பு



Facebook

Twitter

விஜய் பட வாய்ப்பு மிஸ் செய்த பாவனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]