எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
5/16/2015 12:38:29 PM
கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் மேலக்கடையநல்லூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் சக்திவேல்(39). இவரது மனைவி வீரலட்சுமி(32). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. சக்திவேல் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் ஊர் திரும்பினார். தற்போது இங்கு அவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.சக்திவேல் அண்ணன் மகன் வீரக்குமார்(24). இவர் சக்திவேல் வெளிநாட்டில் இருந்தபோது, அவரது குடும்பத்தினருக்கு சிறு சிறு உதவிகள் செய்துள்ளார். இதனால் வீரக்குமாருக்கும், வீரலட்சுமிக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இது சக்திவேலுக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் சக்திவேலுக்கும், வீரலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகும் அவர்கள் கள்ள தொடர்பை விடவில்லை.
இந்த நிலையில், கடந்த 6ம் தேதி வீரலட்சுமி மாயமானார். இதையடுத்து, சக்திவேல் அவரை உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் நேற்று முன்தினம் சக்திவேலுக்கு போன் செய்த வீரலட்சுமி, ‘‘நான் கோவையில் இருக்கிறேன். தற்கொலை செய்யப்போகிறேன். என் நகைகளை வேண்டப்பட்டவர் மூலம் உனக்கு வந்துவிடும்’’என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து சக்திவேல், போலீசாருடன் கோவைக்கு விரைந்தார். அங்கு தேடியும் வீரலட்சுமி பற்றி தகவல் கிடைக்கவில்லை.
இதனிடையே வீரலட்சுமி கடையநல்லூரில் இருப்பது தெரியவந்தது. இதனால் சக்திவேல் ஊர் திரும்பினார். இந்நிலையில் கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமியாபுரம் பகுதியில் வீரலட்சுமியும், வீரக்குமாரும் செங்கோட்டையிலிருந்து சென்னை கொண்டிருந்த ெபாதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.