இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பட்டாபிராமில் மாயமான முதியவர் சடலமாக மீட்பு : போலீஸ் விசாரணை

5/16/2015 12:31:59 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

பட்டாபிராம்: சென்னைக்கு அருகே ஆவடியை அடுத்த பட்டாபிராம், கோபாலபுரம் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மோகனரங்கம் (77). ராயபுரத்தில் உள்ள தனியார் அச்சககத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.கடந்த 6-ம் தேதி வேலைக்கு சென்ற மோகனரங்கம், அதன்பின்னர் வீட்டுக்குத் திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதையடுத்து, அவரது மகன் பாலாஜி கடந்த 8-ம் தேதி பட்டாபிராம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மோகனரங்கத்தை தேடிவந்தனர்.இந்நிலையில், பட்டாபிராம் கோபாலபுரம் மின்வாரிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக, பட்டாபிராம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆவடி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீ்ட்டனர்.இதையடுத்து போலீசாரின் விசாரணையில், அங்கு சடலமாக கிடந்தது மாயமான மோகனரங்கம்தான் எனத் தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனரங்கத்தின் மர்மச் சாவு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் நேற்று பட்டாபிராம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • 3 சிறுமிகளை பலாத்காரம் செய்தவருக்கு 51 ஆண்டு சிறை திருப்பூர் கோர்ட் தீர்ப்பு



  • நகை வியாபாரிகளை தாக்கி ரூ. 72 லட்சம் துணிகர கொள்ளை: 4 ஆயுதபடை போலீசார் கைது



  • பெட்ரோல், டீசல் விலை உயர்வு லாரி உரிமையாளர்கள் கண்டனம்



  • ஆண் குழந்தை பிறந்தால் ரூ. 1000 பெண் குழந்தைக்கு ரூ. 500 லஞ்சம் புதுகை ஜி.ஹெச் முற்றுகை



  • தற்கொலை செய்த வீராங்கனை அரசு வேலையை ஏற்க தாய் மறுப்பு



  • எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை



  • குடந்தை கோயில் தேர் செய்வதில் மோசடி : மரம் உளுத்ததால் பக்தர்கள் வேதனை



  • திருமணமாகி 2 மாதத்தில் காதலனுடன் மனைவி ஓட்டம் : கணவன் போலீசில் புகார்



  • திருமுல்லைவாயலில் ரூ. 5 லட்சம் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல்: வாலிபர் கைது



  • மணலியில் மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]