இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலி : பொருட்கள் விலை உயர்கிறது

5/16/2015 12:27:24 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

திருச்சி: சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் 15 தினங்களுக்கு ஒரு முறை எரிபொருள் விலையை மாற்றி அமைத்துக்கொள்ளும் அதிகாரம் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 1ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 4.18ம், டீசல் ரூ.2.55ம் உயர்த்தப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தொிவித்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3.37ம், டீசல் ரூ.2.98ம் உயர்த்தப்பட்டது. புதிய விலையின்படி திருச்சியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.37 உயர்ந்து 69.56க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.02 உயர்ந்து ரூ.56.36க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சையில் இன்று முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 6951க்கும், டீசல் 56.31க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். எனவே விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், ‘டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் 90 சதவீத வியாபாரிகள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதனால் பால், மளிகை, காய்கறி என அத்தனை அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும்’ என்றார்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர்  பாண்டியன் கூறும்போது, ‘டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை பம்ப்ஷெட் விவசாயத்தில் தான் துவங்குவோம். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் பம்ப்ஷெட் விவசாயம் தான் செய்ய முடியும். மின்சார இணைப்பு இல்லாத விவசாயிகள் டீசல் இன்ஜின் மூலம் விவசாயம் செய்கிறார்கள். இவர் களுக்கு பாதிப்பு ஏற்படும். அனைத்து சிறு விவசாயிகளும் தங்களது உற்பத்தி பொருட்களை இரு சக்கர வாகனங்களில் தான் நகரங்களுக்கு எடுத்து செல்கிறார்கள்.

 பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் இரு சக்கர வாகனங்களில் தான் நகரங்களுக்கு பால் கொண்டு செல்கிறார்கள். எனவே அனைத்து தரப்பு விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இது மறைமுகமாக விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும்’ என்றார்.கட்சிகள் எதிர்ப்பு: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மோடி அரசு ஒரு ஆண்டு நிறைவடைந்ததன் பரிசு என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தவும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

மேலும் சில
  • டாஸ்மாக் கடை அகற்றாதது ஏன்? புதுகை கலெக்டர் பதில் சொல்ல வேண்டும் : மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி ஆவேசம்



  • ஆயுத போராட்டம் வெல்லும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாவோயிஸ்ட்கள் கோஷத்தால் பரபரப்பு



  • மணப்பெண் மறுத்ததால் திருமணம் நின்றது : உறவுக்கார பெண்ணை மணந்தார் மாப்பிள்ளை : தூத்துக்குடியில் நடந்த பரபரப்பு



  • ஆவடி அருகே பரிதாபம் : ரயில் மோதி ஓட்டல் ஊழியர் பலி



  • பல்வேறு கட்சியில் இருந்து விலகி 200 பேர் புரட்சி பாரதத்தில் சேர்ந்தனர்



  • கூடுவாஞ்சேரியில் ரயில்வே மேம்பால பணி நிறுத்தம்: பொதுமக்கள் அவதி



  • முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும்: மத்திய அரசிடம் கேரளா மனு



  • வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் மழை தொடரும்



  • டெல்டாவில் ஒரு வாரமாக அடை மழை : 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம் : கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு நஷ்டம்



  • சென்னை-கோவை இடையே கோடை சிறப்பு ரயில் இயக்கம் : இன்று முன்பதிவு துவங்கியது



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]