திருச்சி ஏர்போர்ட்டில் 3 கிலோ தங்கம் சிக்கியது : கேரள பயணியிடம் விசாரணை
5/16/2015 12:26:57 PM
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கேரள வாலிபர் கடத்தி வந்த 3 கிலோ தங்கம் சிக்கியது.கொழும்புவில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு லங்கன் விமானம் நேற்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உைடமைகளை மெட்டல் டிடெக்டர் மற்றும் ஸ்கேனரில் வான்நுண்ணறிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரின் பேக்கில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டது.அதிகாரிகள் அந்த பேக்கில் சோதனையிட்ட போது அதில் மைக்ரோ ஓவன் இருந்தது. அதை அங்குலம் அங்குலமாக பிரித்து பார்த்த போது அதில் மறைத்து 3 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. தங்கத்தின் மதிப்பு ரூ.85 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.விசாரணையில் தங்கம் கடத்தி வந்தது கேரள மாநிலம் கண்ணூரை சோ்ந்த ரெய்ஸ்(28) என்பதும், அவர் துபாயிலிருந்து கொழும்பு சென்று அங்கிருந்து திருச்சி வந்த போது சிக்கியதும் தெரியவந்தது. ரகசிய இடத்தில் வைத்து கடத்தலின் பின்னணியில் யாரும் உள்ளனரா என அவரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.