இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ராஜஸ்தானில் பயங்கரம் : 3 தொழிலாளர்கள் டிராக்டர் ஏற்றி கொலை: இரு பிரிவு மோதல் வலுக்கிறது

5/16/2015 12:22:38 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இரு தரப்பினர் மோதல் காரணமாக 3 தொழிலாளர்கள் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தானில் ஜாட் மற்றும் தலித் மக்களுக்கு மத்தியில் அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம். இரு தினங்களுக்கு முன்பு நாகவுர் மாவட்டத்தில் உள்ள தங்காவாஸ் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கடந்த வியாழக்கிழமை ஜாட் இனத்தை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜாட் இனத்தவர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி உள்ள கிராமங்களில் புகுந்து வெறியாட்டம் நிகழ்த்தினர். இதில் ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கணக்கான தலித்களின் வீடுகளை சூறையாடியும், தீ வைத்தும் ஜாட் இனத்தவர்  மோதலில் ஈடுபட்டனர். இதை தடுத்து நிறுத்த போராடியவர்கள் மீது ஜாட் இனத்தை சேர்ந்த சிலர் டிராக்டரை விட்டு மோதியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ரத்னராம் மேக்வால் (65), பஞ்சாராம் (60), போகாராம் (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் இந்த மோதலில் 6 பெண்கள் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆயிரக்கணக்கான அப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கையில் ஆயுதங்களுடன் மருத்துவமனையை முற்றுகையிட்டு அடித்து உடைத்தனர். இதில் மேலும் சிலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஜ்மீர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகையில், அப்பகுதியில் உள்ள விவசாய நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என சில தலித் குடும்பத்தினரும், தங்களுக்குத்தான் சொந்தம் என ஜாட் குடும்பத்தினரும் கூறி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் நீண்டகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இரு தினங்களுக்கு முன்பு ஜாட் இனத்தவர் கூட்டிய பஞ்சாயத்தில் தலித் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துதான் இங்கு கலவரம் ஏற்பட்டது என்று தெரிவித்தனர்.தகவல் அறிந்து அங்கு கலவர தடுப்பு போலீசார், குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • 3 சிறுமிகளை பலாத்காரம் செய்தவருக்கு 51 ஆண்டு சிறை திருப்பூர் கோர்ட் தீர்ப்பு



  • நகை வியாபாரிகளை தாக்கி ரூ. 72 லட்சம் துணிகர கொள்ளை: 4 ஆயுதபடை போலீசார் கைது



  • பெட்ரோல், டீசல் விலை உயர்வு லாரி உரிமையாளர்கள் கண்டனம்



  • ஆண் குழந்தை பிறந்தால் ரூ. 1000 பெண் குழந்தைக்கு ரூ. 500 லஞ்சம் புதுகை ஜி.ஹெச் முற்றுகை



  • தற்கொலை செய்த வீராங்கனை அரசு வேலையை ஏற்க தாய் மறுப்பு



  • எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை



  • குடந்தை கோயில் தேர் செய்வதில் மோசடி : மரம் உளுத்ததால் பக்தர்கள் வேதனை



  • திருமணமாகி 2 மாதத்தில் காதலனுடன் மனைவி ஓட்டம் : கணவன் போலீசில் புகார்



  • திருமுல்லைவாயலில் ரூ. 5 லட்சம் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல்: வாலிபர் கைது



  • மணலியில் மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]