நகை அடகு கடையில் 200 பவுன் கொள்ளை : கரூர் அருகே துணிகரம்
5/16/2015 12:21:26 PM
கடவூர்: கரூர் அருகே நகை அடகு கடையில் 200 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த பாலவிடுதியை சேர்ந்தவர் அடைக்கப்பன்(68). இவர் அந்த பகுதியில் கடந்த 20 வருடமாக நகை அடகு கடை வைத்துள்ளார். கடையின் பின்பக்கம் இவரது வீடு உள்ளது. பாலவிடுதி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் இவரிடம் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்த நகை அடகு கடையை அடைக்கப்பன் மருமகன் ராஜாங்கம் (42) என்பவர் கவனித்து வந்தார். இவர் காலையில் 6 மணிக்கு கடையை திறந்து இரவு 8 மணிக்கு அடைப்பது வழக்கம். நேற்றிரவு வழக்கம் போல் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.
இன்று காலை எழுந்து முன்பக்கம் கடைக்கு வந்த ராஜாங்கம் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ேள போய் பார்த்தபோது கடையில் இருந்த லாக்கரும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 200 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.40 ஆயி்ரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரிந்தது. நகைகள் கொள்ளை ேபான சம்பவம் குறித்து அடைக்கப்பன் பாலவிடுதி போலீசில் புகாா் செய்தார். போலீசார் வந்து பார்வையிட்டு சோதனையிட்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கரூர் எஸ்.பி.ஜோஷிநிர்மல் குமார் கொள்ளை நடந்த கடையை வந்து பார்வையிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 200 பவுன் கொள்ளைபோன சம்பவம் பாலவிடுதி பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.