கதாநாயகி கால்ஷீட் மறுப்பு கவுதம் மேனன் அப்செட்
5/15/2015 2:42:44 PM
என்னை அறிந்தால் படத்துக்கு பிறகு கவுதம் மேனன் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தை இயக்குகிறார். சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இதில் திரிஷா நடிப்பதாக இருந்தது. பின்னர் பல்லவி சுபாஷ் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். சிலநாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நிலையில் கவுதமிடம் பல்லவிக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. கேட்ட தேதிகளை ஒதுக்கி தரமுடியாததால் மோதல் முற்றியது. ஒருவழியாக பல்லவி நீக்கப்பட்டார். இதே படத்தை நாக சைதன்யா நடிக்க தெலுங்கிலும் இயக்குகிறார் கவுதம். சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவை அணுகினார். அவரும் பல்லவியை போலவே பிடிகொடுக்காமல் நழுவினார். ‘வேறு படங்களில் நடிப்பதால் அவைகளை முழுமையாக நடித்துக்கொடுக்காமல் பாதியில் வருவது சரியாக இருக்கிறது. ஸாரி’ என ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு எஸ்ஸாகி விட்டார் சமந்தா. இதில் அப்செட் ஆன கவுதம், ஹீரோயின்களைவிட புதுமுக ஹீரோயினே மேல் என்ற நிலைக்கு வந்துவிட்டார். சமீபத்தில் ‘ஒரு வடக்கன் செல்பி’ மலையாள படத்தை பார்த்த கவுதமிற்கு அதில் ஹீரோயினாக நடித்திருந்த மஞ்சிமா மோகனின் நடிப்பு பிடித்தது. அவரை அழைத்து பேசினார். கவுதம் மேனன் படம் என்றதும் மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டார். தமிழ், தெலுங்கு இருமொழிக்கும் மஞ்சிமாவையே ஹீரோயினாக்கி விட்டாராம்.