திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம்
5/15/2015 2:29:30 PM
திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மண்டல குழு தலைவர் தனரமேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் மீது கவுன்சிலர்களிடையே விவாதம் தொடங்கியது. அப்போது கவுன்சிலர் அமல்ராஜ்(அதிமுக),திருவொற்றியூரில் உள்ள அரசு பள்ளிகளில் போதுமான கழிவறை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர் என்றார். இதனை அடுத்து சரவணன் (அதிமுக) எனது வார்டில் எர்ணாவூர் பகுதியில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார். இதற்கு தலைவர் தனரமேஷ் கூறுகையில், கவுன்சிலர்களின் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.